#KIDSFITNESS: விளையாடுற இடமோ சுருங்கிப் போச்சு!!! உங்க குழந்தைகள் FITNESS-க்கு என்ன செய்யலாம்???
  • 16:17PM Apr 20,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:17PM Apr 20,2019 Chennai

முதலில் எல்லாம் வீடுகள் குறைவாக இருந்து காலி இடங்கள் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், குழந்தைகளுக்கு வெளியே விளையாட நிறை இடம் இருந்தது. பொழுதுபோக்கு சாதனங்கள் என்று பெரிதாக இல்லாததால், அன்று வீதியில் இறங்கி விளையாடியாக வேண்டிய கட்டாயத்தால், குழந்தைகள் இயல்பாகவே ஆரோக்கியமாக இருந்தன. ஆனால், இன்று நிலைமை தலைகீழ். வீட்டு மொட்டைமாடி கூட நிறையக் குழந்தைகளுக்கு விளையாடக் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி???

#1. முதலில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் உடல் வலுவாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால், MOBILE, VIDEO GAME போன்ற GADGET-களைக் கொடுத்துப் பழக்காதீர்கள்.

#2. குழந்தைகளுக்கு விளையாட இருக்கும் இடத்தைப் பொறுத்து அவற்றுக்குச் சரியான விளையாட்டுக்களைச் சொல்லிக் கொடுங்கள்.

#3. கால்கள் மற்றும் நுரையீரல் வலுப்பெற்றால் மட்டுமே பின்னாளில் குழந்தைகளால் அதிக உடலுழைப்பைத் தாங்கும் வலிமையுள்ளதாக வளரும். இதற்கு SKIPPING போன்ற விளையாட்டுகள் உதவும்.

#4. FINE MOTOR SKILLS என்பது குழந்தைகளுக்கு மூளை மற்றும் உடலின் COORDINATION-க்கு மிகவும் அவசியம். பிடித்தல், பிசைதல், முறுக்குதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை இதற்குத் துணை புரியும்.

#5. ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு, PEDAL இல்லாத சைக்கிள்கள் விற்கப்படுகின்றன. இதை வைத்து விளையாடும் குழந்தைகள் வெகு விரைவில், BALANCE, FINE MOTOR SKILLS போன்றவற்றில் சிறந்து விளங்குவது கண்டறியப்பட்டுள்ளது.

#6. இது குழந்தைகளின் உடல் மொத்தத்தையும் வலுப்படுத்தவும் உதவுகிறது. சற்று கவனமுடன் சொல்லிக் கொடுத்தால், பின்னாளில் BIKE வாங்கிக் கொடுத்துவிட்டுப் பதறிக் கொண்டிருக்கத் தேவையிருக்காது.

#7. இயற்கையாகவே உடலுக்குத் தேவையான உறுதியைப் பெற, குழந்தைகள் தாங்களே எதையாவது செய்து கொண்டிருப்பது இயற்கை. எதையாவது பிடித்துத் தொங்கினாலோ, ஏறினாலோ கண்டிக்காமல், அடிபடாதவாறு சற்று கவனியுங்கள் போதும்.

#8. LEAVE நாட்களிலாவது, சற்று பெரிய விளையாடும் இடங்களுக்குக் கூட்டிச் சென்று நன்றாக ஓட விடுங்கள். அது அந்த வாரம் முழுவதும் அவர்களுக்கான சுறுசுறுப்பைத் தரும்.

#9. KIDS பற்றிய சில பயனுள்ள இணைப்புகள்: Why Kids Should Play?  |  Buying a Toy for your Toddler.  |  Theory of Balance Bikes!!!  |  Travelling With Kids.  |  Language Efficiency.  |

#KIDSFITNESS பற்றிப் போன தலைமுறை கவலைப்படத் தேவையில்லாமல் இருந்தார்கள். ஆனால், இன்று அதைப் பற்றிக் கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று நிலை உருவாகிவிட்டது. ஆக, முடிந்தளவு அவர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் நன்மைக்காகவாவது!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top