#2019 இந்தாண்டு முட்டாள்தனமாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர்கள் பட்டியல்!
  • 12:51PM Mar 19,2020 India
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 12:51PM Mar 19,2020 India

இந்த ஆண்டு இந்திய அரசியலில் சில எதிர்பார்க்கமுடியாத விஷயங்கள் நிகழ்ந்துவிட்டது. மோடியின் வெற்றி, காஷ்மீரின் அவலநிலை, அதிகளவில் நடந்த கற்பழிப்புக் குற்றங்கள் எனக் கூறிக்கொண்டே போலாம். ஆனால் ஜனநாயகத்துக்கு எதிராக நடந்த இந்த அநியாயங்களுக்கு மத்திய அமைச்சர்களில் கூறப்பட்ட சில வேடிக்கையான கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதிலும் முக்கியமாகப் பசுவின் கோமியத்துக்கு இருக்கும் அற்புத மருத்துவ சக்தி முதல் ஆட்டோமொபைல் தொழிற்சாலையின் விழுச்சி வரை அனைத்திற்கும் அடுக்கடுக்கான காரணங்களைக் கூறியுள்ளனர். அவற்றில் சில முக்கிய அமைச்சர்களின் கருத்துகளை இங்குப் பார்ப்போம்.

#1 மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்றைய தலைமுறையினர் உபர், ஓலா பயன்படுத்துவதால் தான் ஆட்டோமொபைல் உற்பத்தி விழுச்சி அடைந்ததாகக் கூறியுள்ளார்.

#2 மழை மேகத்துக்குள் மறைந்துகொண்டாள் பாக்கிஸ்தான் ரேடாரால் நமது போர் விமானங்களைக் கண்டுபிடிக்க முடியாது என்று நான் தான் கூறினேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

#3 பசுவின் கோமியத்தால் தான் தனக்குப் புற்று நோய் சரியானதாக மத்திய அமைச்சர் சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார்.

#4 பசுவின் பாலில் தங்கம் இருப்பதாக மத்திய அமைச்சர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.

#5 உலகிலேயே மாடு மட்டுமே ஆக்சிஜென் வாயுவை வெளியிடுவதாக மத்திய அமைச்சர் திரிவேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

#6 இந்தியாவில் மழை பெய்ய மத்திய அரசு இந்திரனை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுனில் பரலா தெரிவித்துள்ளார்.

#7 இந்தியாவில் பரவும் விஷ வாயுவுக்கு எதிரி நாடுகள் தான் காரணம், அவர்கள் பயத்தில் விஷ வாயுவை வெளியிடுகின்றனர் என்று மத்திய அமைச்சர் வினித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 

#2019 இந்த ஒரு வருடத்தில் மத்திய அமைச்சர்கள் இதுபோல ஏகப்பட்ட முட்டாள்தனமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதில் மற்றொரு செய்தி என்னவென்றால், இப்படிக் கூறிய அனைவருமே பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top