#DadBods சிக்ஸ் பேக்லாம் வேணாம், தொப்பை இருந்தாலே அழகு தான்! ஆண்களுக்கு இன்பம் அளிக்கும் அதிர்ச்சி ரிப்போட்!
  • 16:10PM Jun 21,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 16:10PM Jun 21,2019 Chennai

இதுவரை சிக்ஸ் பேக் இருந்தால் தான் பெண்களை மயக்கவும், கவரவும் முடியும் என்று நிலவி வந்த கருத்துக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகிவுள்ளது. தற்போது கல்லூரி கட் அடிக்கும் மாணவன் கூட ஜிம்மிற்குத் தவறாமல் செல்வான். 6 மணிக்கு மேல் ஏரியாவில் இருக்கும் அனைத்து இளைஞர்களையும் ஜிம்மில் பார்க்கலாம். எப்படியாவது சிக்ஸ் பேக் வரவைக்கவேண்டும் என்று விடாமுயற்சியுடன் உடற்பயிற்சி செய்வார்கள்.

இந்நிலையில் உலகின் மிகப் பெரிய பிட்னெஸ் நிறுவனமான Planet Fitness தற்போது ஒரு அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பிட்னெஸ் சென்டர்களில் பிட்டாக இருப்பவர்களைத் தான் அனைவர்க்கும் பிடிக்கும் என்று கூறுவார்கள், ஆனால் Planet Fitness வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில் சிக்ஸ் பேக் உள்ளவர்களை விட Dad Bods உள்ளவர்களைத் தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது என்று தெரிவித்துள்ளனர். சரியான பிட்னெஸ் இல்லாமல் கொஞ்சம் வயதானவர்கள் போலப் பருமன் அதிகமாக உடல்வாகு கொண்டவர்களை Dad Bods என்று குறிப்பிடுவார்கள்.

Planet Fitness வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில் ஐந்தில் நான்கு பெண்களுக்கு Dad Bods போல உடல்வாகு கொண்ட ஆண்களைத் தான் பிடித்துள்ளதாம். பிட்னெஸ் இல்லாவிட்டாலும் அவர்களின் உடல்வாகுக்கு ஏற்றவாறு தன்னம்பிக்கையுடன் நடந்துகொள்வது பெண்களுக்குப் பிடித்துள்ளதாம். சிக்ஸ் பேக் உள்ளவர்களை விட Dad Bods உள்ளவர்கள் கொஞ்சம் கம்பிரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தொப்பை இருந்தால் பெண்ணு கிடைக்காது என்ற கவலை இனி இல்லை!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top