#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.? புதுசா கிளம்பியிருக்கும் பீதி.!
  • 17:15PM Jul 16,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:15PM Jul 16,2019 Tamil Nadu

பொதுவா புதுசா கல்யாணம் பண்ணி போற பொண்ணுகளுக்கு, மாமியார நினச்சு ஒரு பயம் இருக்கும். அவங்க அப்படி சொல்லுவாங்களோ? இப்படி சொல்லுவாங்களோ? நம்மள கொடுமபடுத்தீருவாங்களோன்னு சந்தேகம் இருக்கும். அதுக்கு ஏத்த மாதிரியே தான் சினிமாலயும், சீரியல்லயும் கொடுமகாரி மாமியார காமிப்பாங்க. நிஜத்துல மருமகள, மகள் மாதிரி பாத்துக்குற மாமியாரும் இருக்காங்க. ஆனா இதுவரைக்கும் மாமனார் ரோல் பத்தி யாருமே பெருசா பேசல. இப்போ மாமனார் பத்தியும் ஒரு பேச்சு அடிபட்டுகிட்டு இருக்கு. அது என்னனா பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிக்கறாங்கன்னு சொல்றாங்க. அதுக்கு காரணம் என்னன்னு இல்லத்தரசி தீபிகா ராஜேந்திரன் ஒரு பதில் சொல்லி இருக்காங்க. அத அடுத்து வரிசையா பார்க்கலாம்.

#1. முதலாவது அனைவரும் அறிந்ததே, மாமியார் மருமகளுக்கு எப்போதும் ஒத்துவராது என்பது. ஆனால், மாமனார் மருமகளுக்கு ஒத்து வராது என்று நான் அறிந்ததில்லை.

#2. பெரும்பாலும் மாமனார்கள் எதையும் பெரிது படுத்த மாட்டார்கள். கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

#3. மாமியாரைச் சமாளிப்பதை விட மாமனாரைச் சமாளிப்பது சுலபம்.

#4. ஏதாவது மனஸ்தாபம் என்றால் புரியும்படி விளக்கினால் புரிந்து கொள்வார்கள்.

#5. பல வீடுகளில் தங்களுக்கு மகள் இல்லை என்றால் மருமகளை மகளாக நினைக்கும் மாமனார்கள் இருக்கிறார்கள்.

#6. மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை என்றாலும் மாமனார் மனதில் கொள்ள மாட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார்கள்.

#Fatherinlaw: இவை மட்டுமே அனுபவ ரீதியாக தெரிய வந்த தகவல். உளவியல் ரீதியாக அழுத்தம் திருத்தமான ஆதாரம் எல்லாம் எதுவும் இல்லை. இவை முழுக்க முழுக்க அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டது மட்டுமே. | கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர்! அது என்ன ஆடை தெரியுமா?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top