Misc

அடிக்கடி இவ்வாறான சூழ்நிலையை சந்திக்கிறீர்களா? கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க! இதை வளரவிட்டா ஆ பத்து உங்களுக்குத்தான்!

Oct 07 2021 11:07:00 AM

கோவில்களில் அர்ச்சனை நடைபெறுவதுபோல, நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது பொதுவாக இயல்பான ஒன்று தான். ஆனால் அவ்வாறு வரும் பிரச்சனைகள் உருவாக்கும் தாக்கம் உடலை எவ்வாறாக பாதிக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா?

stress-free tension-free

சரி இதனை கவனியுங்கள், தண்ணீர் இரும்பை வெட்டுமா? அது எவ்வாறு முடியும்? நிச்சயம் வாய்ப்புகள் கிடையாது என்று நீங்கள் நம்புவீர்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில், இரும்பின் மீது தண்ணீரை செலுத்தும்போது அது இரும்பை வெட்டும். இயல்பாக இருக்கும் தண்ணீரை அந்த அளவிற்கு கொண்டு செல்லும் வல்லமை அழுத்தத்திற்கு உள்ளது.

stress-free tension-free

நமது வீடுகள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் சமுதாயத்தில் நடைபெறும் பிரச்னைகள் நம்மை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்மிடம் ஒருவித கோவத்தை உருவாக்குகின்றன. அது தான் அழுத்தம் உருவாக காரணம். பின்னர் அதனை தொடர்ந்து சிந்திக்கும்போது அழுத்தம் மேற்கொண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தவித மன அழுத்தம், உங்கள் இதயத்தை கூட நிறுத்திவிடும் வல்லமை கொண்டது. அதாவது இதன் விளைவு தான் Heart Attack. உங்கள் மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வந்தால் நிச்சயமாக உங்கள் தூக்கம் தொலைந்துவிடும்.

stress-free tension-free

பெரும்பாலான உடலியல் உபாதைகளை சரிசெய்ய நல்ல உறக்கம் இன்றியமையாததாக உள்ளது. ஆனால் அழுத்தம் நல்ல உறக்கத்தை தடை செய்யும்பட்சத்தில், உடலியல் இயக்கம் சமநிலையை அடையாமல் பல்வேறு விதமான நோய்களுக்கு வழிவகை செய்கிறது.

stress-free tension-free

அதுசரி, இதனை எவ்வாறு கையாள்வது என்றால், முடிந்தவரையில் பிரச்சனைகளை தவிர்த்து விடுங்கள். தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். எதிர்காலம் குறித்து அதிகம் கவலை கொள்ளவேண்டாம். முடிந்த வரையில் இயற்கையோடு இணைந்து செயல்படுங்கள். நல்ல நடைப்பயிற்சி, சுவாச பயிற்சி, யோகா, தியானம் போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். சஞ்சலமான மனதுடன் இருக்கும்பட்சத்தில் கோவில்களுக்கு சென்று வரலாம். முடிந்தவரையில் ஆரோக்கியமான உணவு மற்றும் உறக்கத்தை மேற்கொள்ளுங்கள். தூங்குவதற்காக மாத்திரைகளை உபயோகப்படுத்தாதீர்கள். அளவான அழுத்தம் வளமான வாழ்க்கையை தரும்.