Rainforest

உம்முனு இருக்கிறவங்களை ஜம்முனு ஜாலியா சிரிக்க வைக்க இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன்

Apr 19 2021 09:50:00 PM

தற்போது அனைத்து வயதினரும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் மன அழுத்தம். குழந்தைகளுக்கு பள்ளி , ஆசிரியர், சக மாணவர்கள் மூலம் ஒரு வித மன அழுத்தம் உண்டாகிறது. பெரியவர்களுக்கு வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. யாரும் இல்லாமல் தனிமையில் இருப்பது கூட சிலசமயம் மன அழுத்த பிரச்சனைகளுக்கு வழிவகை செய்கிறது.

stress-relief

மனதிற்கு பிடித்தமான செயல்கள் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைப்பது ஒரு வழி. இன்னொரு வழி சில உணவுகள் மூலம் மன அழுத்தம் வராமல் தடுக்க முடியும். மாதுளம் பழரசம் அருந்துவது மன இறுக்கத்தை குறைக்கும். அதனுடைய சுவை மற்றும் நிறம் ஒரு வித மன அமைதியை கொடுக்கும். மூளையில் சுரக்கும் செரோட்டின் என்ற சுரப்பியால் தான் மன அழுத்தம் உண்டாகிறது. அதை சரிசெய்ய வாழைப்பழம் சாப்பிடலாம்.

stress-relief

அமுக்கிரா கிழங்கு சித்த மருத்துவத்தில் முக்கியமாக கருதப்படுகிறது. இதை போடி செய்து சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையும். இந்த பொடியை பாலில் கலந்து குடிப்பதால் இரவு நேரத்தில் நல்ல தூக்கம் வரும். அலைபாயும் மனதை சமநிலைப்படுத்த மண்பானை நீர் பெரிதும் உதவி புரியும். மண்பானை நீரில் சிறிது வெட்டி வேர் மற்றும் சீரகம் கலந்து அந்த தண்ணீரை குடிப்பது சிறப்பான பலன்களை தரும். தினமும் இரண்டு முறை குளிப்பதும் மனதிற்கு நிம்மதியை தரும் செயல்களில் ஒன்றாகும்.