Highrise

படுத்துகிட்டே பரலோகம் போக வேண்டுமா? ஸ்கேட்போர்டை வச்சிக்கிட்டு இவிங்க பண்ணுற அலப்பறை கொஞ்சம் ஓவரா இருக்குதே!

Sep 27 2021 05:40:00 PM

ஸ்ட்ரீட் லூஜ் என்பது புவியீர்ப்பு விசையை பயன்படுத்தி மனிதர்கள் விளையாடும் ஒரு ஆ பத்து நிறைந்த விளையாட்டாகும். கிட்டத்தட்ட ஸ்கேட்போர்டிங் போலத்தான் இதுவும் இருக்கும். இதிலிருக்கும் வித்தியாசம் என்னவேன்று தெரிந்தால் நீங்க அ திர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. ஸ்கேட்போர்டு பலகையில் படுத்துக்கொண்டு பயணிப்பதே இந்த விளையாட்டின் ஆ பத்து நிறைந்த ரகசியம்.

street-luge dangerous-game

நான் சொல்லுவதை நினைத்து என்னை வடிகட்டின முட்டாள் என்று கூட நீங்க நினைக்கலாம். அதுல தப்பில்ல. ஆனா உண்மையான முட்டாள் யாரென்று கேட்டால் இதை விளையாடும் அதிசயப்பிறவிகள் தான். இந்த விளையாட்டை விளையாடுவதற்கு கண்டிப்பாக சமதளமான சாலை அல்லது மைதானம் தேவைப்படும்.

street-luge dangerous-game

ஸ்பீடு பிரேக்கர் இருக்குற சாலையில் இதை விளையாடினால் பலகையோட பரலோகத்துக்கு போக வேண்டியது தான். சமதளமான சாலையில் போட்டியாளர்கள் பயணிக்கும் போது சரிவான இடங்களில் பலகை இன்னும் வேகமாக செல்லும். நீங்க யூகிக்க முடியாத வேகத்தை இதில் எட்ட முடியும். மணிக்கு 150 கிலோமீட்டர் என்ற வேகத்தில் கூட பயணம் செய்ய வேண்டியிருக்கும். அந்த வேகத்தில் நீங்க சிறு தவறு செய்தாலும் சங்கு தான்.

street-luge dangerous-game

இதுல ஹைலைட்டான விஷயம் என்னவென்று தெரியுமா? இந்த பலகையில் பிரேக் என்று எதுவும் கிடையாது. படுத்துக்கொண்டு பயணம் செய்யும் வீரர்கள் தங்கள் கால்களை மெதுவாக தரையில் வைத்து வேகத்தை குறைத்து தான் நிற்க முடியும். காலை நேரடியாக தரையில் வைத்து பலகையை நிறுத்துவது மிகவும் ஆ பத்தானது. அதிலும் படுத்துக்கொண்டு இதை செய்வது உங்கள் உயிருக்கு உத்திரவாதத்தை அளிக்காது. நீங்க திறமையான நபராக இருந்தால் மட்டுமே பலகையை நிறுத்தி உயிர் பிழைக்க முடியும். உயிரை பணயம் வைத்து விளையாடப்படும் இந்த விளையாட்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து உருவானது.