Misc

தெருச்சண்டைக்கு இவ்வளவு மவுசா? இது தெரியாம இத்தனை வருடங்களாக வீட்டுக்குள்ள சண்டை போட்டுக்கிட்டு இருக்கோமே!

Sep 12 2021 10:33:00 AM

தெருச்சண்டை என்று சொன்னதும் இரண்டு ரவுடிகள் போடும் சண்டை அல்லது பெண்களின் குழாயடிச்சண்டை என்று ஆவலா எதிர்பார்த்திருப்பீங்க. ஆனா அதுலாம் டம்மி சண்டையாச்சே. அதைப்பத்தி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கிறன்.

street-fighter popular-game

ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்ற விளையாட்டு 80 மற்றும் 90 களில் பிறந்த குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான விளையாட்டாக இருந்தது. அந்தக்காலத்தில் இருந்த அரைகுறை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் கூட இந்த விளையாட்டு அத்தனை பேரை எவ்வாறு கவர்ந்தது என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று தான்.

street-fighter popular-game

ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்பது பொதுவாக எஸ்எஃப் அல்லது சுடோ என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது ஒரு சண்டை போடும் வீடியோ கேம் விளையாட்டு ஆகும். இந்த அற்புதமான விளையாட்டை கேப்காம் நிறுவனம் உருவாக்கி வெளியிட்டது.

street-fighter popular-game

இந்தத் தொடரின் முதல் ஆட்டம் 1987 இல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த விளையாட்டின் பல வெர்சன்கள் அடுத்தடுத்து வெளியாகி விளையாட்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.

street-fighter popular-game

இந்த விளையாட்டானது இதுவரை அதிக வசூல் செய்த வீடியோ கேம்களில் ஒன்றாக உள்ளது. மார்ச் 2021 நிலவரப்படி உலகளவில் 46 மில்லியன் யூனிட்டுகள் என்ற விற்பனையை எட்டி இந்த விளையாட்டு சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்த விளையாட்டு 12.2 பில்லியன் டாலர்களுடன் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த சண்டை விளையாட்டு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.