1000 ரூபாய் முதலீட்டில் 30 கோடிக்கு அதிபதியான தோசை கடைக்காரர்!
  • 14:20PM Dec 01,2018 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 14:20PM Dec 01,2018 Chennai

"தோசை கடை போட்டாள் கோடிகோடியாக சம்பாதிக்கலாம்" என்று சிலர் கூறியிருப்பார்கள். ஆனால் அப்படி கூறுவதற்கு காரணம் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் 30 வருடத்தில் ஒரு தோசையை கடையை வைத்தே கோடிகோடியாக சம்மதித்துள்ளார் என்று கூறினால் உங்களால் நம்பமுடியுமா? அந்தச் சாதனையாளர் வேறு யாரும் அல்ல, Prem Sagar Dosa Plaza கடைகளின் நிறுவுனர் பிரேம் கணபதி தான்! பிரேம் கணபதி தமிழகத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடி மாவட்டம் நகலாபுரத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் 6 சகோதரர்களுடன் பிறந்தார் பிரேம். இவர் பள்ளிப்பருவத்தில் இருக்கும் போது அவரது குடும்பத்தில் ஏகப்பட்ட கஷ்டங்கள் ஏற்பட்டதால், உயர் கல்வி படிப்பதைக் கைவிட்டார். அக்கம்பக்கத்தில் இருக்கும் சின்னச்சின்ன வேலைகளைச் செய்து மாதம் மொத்தம் 250 ரூபாய் சம்பாதித்து அவர் குடும்பத்திற்கு கொடுப்பார். இந்த பணத்தை வைத்து எப்படி தனது குடும்பத்தை முன்னேற்ற முடியும் என்று இவர் யோசித்துக்கொண்டிருந்த தருணத்தில், தெரிந்தவர் ஒருவர் மும்பையில் மாதம் 1200 ரூபாய் சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிக்கொண்டு தான் சேர்த்து வைத்திருந்த கொஞ்சோ பணத்தையும் எடுத்துக்கொண்டு மும்பை கிளம்பி சென்றார். ஆனால் மும்பை சென்ற அவருக்கு ஏமாற்றம் தான் மிச்சம், அவர் கொண்டுவந்த பணத்தையும் சிலர் திருடிவிட்டு, அவருக்கு வேலையும் வாங்கித் தராமல் ரயில் நிலையத்தில் நிர்க்கதியாக நிற்கவைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அப்போது அவருக்கு வயது 17!

புது ஊர், புரியாத மொழி, திரும்பிச் சென்றுவிடலாம் என்று யோசித்தபோது கையில் பணம் இல்லை. மனக்குழப்பத்தில் நின்றுகொண்டிருந்த பிரேம் கணபதி அந்த சமயத்தில் ஒருமுடிவெடுத்தார். ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு, இங்கயே தங்கிச் சம்பாதிப்போம் என்று பக்கத்தில் இருந்த ஒரு உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையைப் பார்த்தார். மாதம் 150 ரூபாய் சம்பளத்தில் அங்குப் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த பிரேம் அடுத்த 2 வருடத்தில் பல உணவகங்களில் வேலைபார்த்து, ஒரு உணவகம் எப்படிச் செயல்படும் என்பதைக் கற்றுக்கொண்டார். இந்த இரண்டுவருடத்தில் தனது செலவுகளைக் குறைத்துக்கொண்டு 1000 ரூபாய் சேர்த்துவைத்தார். மும்பையில் உள்ள வாஷி ரயில்நிலையம் முன்பு ஒரு தள்ளுவண்டி கடையை வாடகைக்கு எடுத்து, தனது சேமிப்பை முதலீடாகக் கொண்டு தோசை கடை தொடங்கினர். இவர் இந்தக் கடையை தொடங்கிய சில நாட்களில் கடைக்கு கூட்டத்தின் வருகை அதிகரித்தது. தமிழ் நாட்டில் தனது வீட்டில் செய்யும் இட்லி, தோசை போலவே அந்தத் தரத்துடன் சமைத்துள்ளார். இந்த ருசிக்காகப் பலர் கடைக்கு வழக்கமாக வரத்தொடங்கினர். இதனால் ஊரில் இருக்கும் தனது சகோதரர்களைக் கடைக்கு வேலை செய்வதற்கு துணையாக அழைத்து வந்தார். 1000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய இந்தச் சின்ன தள்ளுவண்டிக் கடை மாதத்திற்கு 20,000 வரை லாபம் பார்த்தது. இந்த பணத்தை வைத்துக்கொண்டு வாஷி ரயில்நிலையம் பக்கத்தில் ஒரு சின்ன இடத்தை வாடகைக்கு எடுத்து அங்குக் குழம்பு செய்வது, மாவு கரைப்பது எனக் கடைக்கு தேவைப்படும் வேலைகளை அங்குச் செய்துவந்தனர்.

இந்தக் கடையில் வந்த லாபத்தை வைத்து 1997-ம் ஆண்டு அந்தப் பகுதியில் ஒரு கடையை லீசுக்கு எடுத்து "Prem Sagar Dosa Plaza"-ஐ தொடங்கினர். இந்தக் கடைக்கு வாடிக்கையாளர்கள் பலர் வரத்தொடங்கினர். கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பலர் இந்தக் கடைக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதில் பிரேமிற்கு நெருக்கமான மாணவர்கள் அவருக்கு எப்படி இணையத்தைப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொடுத்தார். இணையம் மூலம் வெளிநாட்டு உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ள முயற்சித்தார். அதன்பிறகு எப்போதும் செய்யும் வழக்கமான தோசையை குறைத்து, schezwan dosa, paneer chilly, spring roll dosa என 26 புதுவிதமான தோசைகளை அறிமுகப்படுத்தினார். இதனால் கடைக்கும் வாடிக்கையாளர்கள் கூட்டம்கூட்டமாக வரத்தொடங்கினர். பிரேமிற்கு நீண்டநாட்களாக மாலில் கடை திறக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காகப் பல முயற்சிகள் எடுத்துவந்தார். அப்போது வாஷி சென்ட்ரல் மாலில் அவரது கடையை திறக்க வாய்ப்பு கொடுத்தனர். அங்கும் இவரது "Prem Sagar Dosa Plaza"-வை திறந்ததும் எக்கச்சமாகக் கூட்டம் வரத்தொடங்கியது. இதனால் பலர் இந்தக் கடையின் Franchise உரிமை பெறுவதற்கு இவரை அணுகியுள்ளனர். இவரும் எந்தத் தயக்கமுமின்றி முன்வந்து கொடுத்தார். அதன்பிறகு 2003-ம் ஆண்டு தானேவில் உள்ள ஒண்டெர் மாலில் இவரது "Prem Sagar Dosa Plaza"-ன் முதல் கடை திறக்கப்பட்டது. அதன் பிறகு இவரது "Prem Sagar Dosa Plaza" பிரபலமாகி தற்போது இந்தியா, நியூசிலாந்து, துபாய் மற்றும் ஓமன் என உலகம் முழுவதும் சேர்த்து 70 கடைகள் திறந்துள்ளனர். வெறும் 1000 ரூபாய் முதலீட்டில் தொடங்கி தற்போது 30 கோடி மதிப்புள்ள சாம்ராஜித்திற்கு இவர் அதிபதியாக உள்ளார். வெறும் தனது தன்னம்பிக்கையை மட்டும் நம்பி பிரேம் கணபதி இந்த உயரத்தை அடைந்துள்ளார்.

Top