ப்ராண்ட்கள் சொல்லாத கதை!!!
  • 04:54AM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 04:54AM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India

ப்ராண்ட்கள் சொல்லாத கதை!!!

பொதுவாக ப்ராண்ட்கள் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறதுகொஞ்ச நஞ்சமல்ல அந்த ப்ராண்டைப் பற்றி யாராவது தவறாகச் சொன்னாலோ, அல்லது இந்த மனநிலை தவறு என்று சொன்னால்கூட Unfriend and Block செய்யுமளவிற்குஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு குறிப்பிட்ட வகை போன் வைத்திருந்த காரணத்தினாலேயே பணியாளர் ஒருவர் நம்பிக்கையானவர், தன்னைப் போலவே சிந்திக்கக் கூடியவர் என்று நம்பும் அளவிற்கு ப்ராண்ட்கள் மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு.

பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தைக்கு வந்தாலும் குறிப்பிட்ட சில ப்ராண்ட்கள் மட்டும், அவை கார்களாகட்டும், செல்லிடத் தொலைபேசிகளாகட்டும்ஏன் உள்ளாடைகள் வரையும் மக்கள் தங்களின் அடையாளமாகக் காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்இந்த ப்ராண்ட்கள் சொல்லாத கதை ஒன்று இருக்கிறது தெரியுமா??? அது நம்மை எப்படி முட்டாளாக்கி வைத்திருக்கிறது என்பதுதான்ஒரு பொருளின் ஒட்டுமொத்த மதிப்பும், மரியாதையும் அந்தப் பொருளின் உள்ளே இருக்கும் துணை சாதனங்களின் மதிப்பை வைத்துக் கணக்கிடுவதைத் தவிர்த்து, அதன் வெளியே ஒட்டியிருக்கும் சிறு லேபிளில் இருக்கிறது என்று நம்ப வைத்த கதை இது

Features எனப் பார்க்கும் போது குறைவாக இருக்கும் சில பொருட்கள், பெயர் ஒன்றுக்காகவே மற்றதை விட அதிக அளவிற்கு விலை போவது என்பது அவர்கள் வியாபார தந்திரத்தை மட்டுமே குறிக்கும் என்பதை யாரும் காது கொடுத்து கேட்கக் கூடத் தயாரில்லைமற்றொரு காரணம் இந்தப் பொருட்கள் தொடர் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படுபவை. ஒரு முறை நீங்கள் ஒரு சாதனத்தைப் பயன்படுத்தத் துவங்கினால், கடைசி வரை அந்தச் சாதனத்தை. பிடிக்கிறதோ இல்லையோபயன்படுத்தியாக வேண்டும்வேறு நிறுவனத்தின் சாதனத்திற்கு மாற விரும்பினால் உங்கள் இத்தனை வருட உழைப்பையும் தரவு சேமிப்புகளையும் இழக்க நேரிடும்அல்லது மிக நீண்ட வழி முறையின் மூலம் மட்டுமே மாற்ற முடியும்.

இதில் சிக்கிக் கொண்டவர்கள் அடுத்தவர்கள் தொடர்ச்சியாக எதற்கு இந்த நிறுவனத்தின் பொருளை வாங்கினாய் என்று கேட்டால் உண்மையைச் சொல்ல மாட்டார்கள் என்பது அடிப்படை மனோநிலைபுதிதாய் பொருள் வாங்க வருபவனும், அவரு வச்சிருக்காரு, இவரு வச்சிருக்காரு, இதான் கெத்து என இதையே வாங்க முயல்வர்உங்களுக்குத் தெரியுமா உலகிலேயே கெத்தான தொலைபேசி எனக் கருதப்படும் ஒரு தொலைபேசியில் உள்ள துணைசாதனங்கள், பத்தாம் இடத்தில் இருக்கும் நிறுவனத்தின் தொலைபேசியில் உள்ள துணை சாதனங்களை விடக் குறைவாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. உங்கள் தரம் அந்தக் கெத்தான தொலைபேசி என்றால் - என் தரம் அந்தத் துணை சாதனங்கள் அதிகமிருக்கும், விலை மலிவாக இருக்கும் பத்தாமிடத்தில் இருக்கும் தொலைபேசிதான். காரணம், எனக்கு அதன் பயன்பாடு முக்கியமே ஒழிய, பின்னாலிருக்கும் வில்லை அல்ல. மேலும், நாளை என் சாதனத்தில் பிரச்சனை வந்தால் அதை எறிந்து விட்டு அப்போது சந்தையிலிருக்கும் புதிய தொலைபேசியை, அதிக வசதிகளுடன் பழைய போன் வாங்கும் தொகை வித்தியாசத்திலேயே வாங்கி விட முடியும்.

இரண்டாவது தனித்துவம் எனும் பொய்மனிதர்களுக்குத் தனித்துவம் என்பது மிக முக்கியம்சாதனங்களுக்கு???  இந்தச் சாதனத்தில் மட்டும்தான் இவை இருக்கும் என்று சொல்லப்பட்ட பல வசதிகள் மற்ற சாதனங்களில் இல்லாமல் இல்லைஆனால் மற்ற சாதனங்களில் கிடைக்கும் பல விஷயங்கள் இந்தச் சாதனத்தில் கிடைக்கவே கிடைக்காது எனும் பொழுது, உங்கள் சாதனம் தனித்தன்மையானதா அல்லது தனிமைப்படுத்தப்பட்டதா??? ப்ராண்டிங்கின் அடுத்த பொய் இதுஒரு அரசியல் கட்சி சார்புள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது போலத்தான் இதுநீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை அறியாமலேயே, அவர்கள் காட்டுவதை மட்டுமே நிகழ்ச்சியென நம்பிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். தொலைக்காட்சியில் பிரச்சனை சேனலை திருப்பியதுடன் முடிந்துவிடும்ஆயிரக்கணக்கில் போட்டு வாங்கும் சாதனங்களோ மீண்டும் அதே தொகையோ, அல்லது அதிகமாகவோ செலவு செய்தால் மட்டுமே தீரும்.

நீண்டகால உழைப்பு என்பது மக்களை முட்டாளாக்கும் மற்றொரு ப்ராண்டிங் யுக்திநான் வாழப் போவது இன்னும் 40 ஆண்டு காலம் என வைத்துக் கொண்டால், 400 ஆண்டுகள் ஓடும் கடிகாரம் எனக்கு எதற்கு??? இன்றைய காலகட்டத்தில், Constant upgrade ஆகிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. உங்களின் விருப்பமான சாதனை விற்பனை நிறுவனமே ஆண்டொன்றுக்குக் குறைந்தபட்சம் ஒரு புதிய, அடுத்த கட்டப் பொருள் என்பதை வெளியிடும்அதிகபட்சம் 3 வருடங்கள் தாக்குப்பிடிப்பீர்கள். புதிதாய் ஒன்று வாங்குவீர்கள்ஆனால், 3 வருடம் நீங்கள் பயன்படுத்திய சாதனத்தையும், இப்பொழுது வாங்கும் சாதனத்தையும் ஒரே காரணத்திற்காக வாங்கியிருப்பீர்கள், அது Robust என்ற காரணத்தால்நான் ஐந்து வருடங்கள் உபயோகப்படக் கூடிய சாதனத்தை நீங்கள் வாங்கியதை விடக் கூடுதல் வசதியுடன், பாதி விலையில் வாங்கி அதை 3 வருடங்களில் விற்றுவிட்டு வேறு வாங்கினால் இதில் பாதிக்கப்பட்டது யார்???

கடைசியாக ஒன்று, எந்தப் பொருளை வாங்கினாலும் அதன் பெருமை பயன்படுத்துபவரையும், பயன்படுத்தப்படும் விதத்தையும் பொறுத்தே அமைகிறதுசாதனங்களின் மூலம் ஒருவரின் புகழ் உயரவே உயராதுஅது வெறும் ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் மட்டுமே. உங்களின் உண்மையான செயல்பாடு அதன் பின்னே உள்ள உங்களுக்குள்ளேதான் இருக்கிறதுஅதற்கு இந்தச் சாதனங்களின் அளவு விலையும் தேவையில்லைஇந்த ஒரு கதையை மட்டும் எந்தவொரு நிறுவனமும் சொல்லாத, சொல்ல முடியாத கதை!!!   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top