ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு தினத்தில் இங்கிலாந்து அரசு செய்த காரியம்!
  • 12:05PM Mar 14,2019 England
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:05PM Mar 14,2019 England

கடந்தாண்டு மறைந்த அறிவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. Motor Neurone Disease காரணமாக இவர் 23 வயதில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறினார்கள், ஆனால் சாவையும் சமாளித்து அறிவியல் ரீதியான பல தகவல்களை தந்து, தனது 76 வயதில் உயிரிழந்தார். Black Hole Radiation, Quantum Theory, Theory of Everything என உலகிற்கு பல கோட்பாடுகளை வழங்கியுள்ளார். இவரது சாதனைகளை ஒரு வரியில் கூறமுடியவில்லை என்றாலும், இவர் அறிவியல் உலகிற்கு கொடுத்த "Hawkings Radiation" காலம் உள்ளவரை அவரது புகழை பறைசாற்றும்.

Image result for stephen hawking coin

இந்நிலையில் இங்கிலாந்தின் நாணய வெளியீட்டு நிறுவனமான ராயல் மின்ட், மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கை கெளரவிக்கும் வகையில் அவர் பெயரில் 50 பென்ஸ் நாணயத்தை வெளியிட்டுள்ளனர். இந்த நாணயத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் பெயருடன், அவரது Hawkings Radiation சமன்பாடு மற்றும் Black Hole-ன் படமும் இடம்பெற்றுள்ளது. இந்த நாணயத்தை வடிவமைத்த எட்வினா எலிஸ் இதை பற்றி கூறுகையில், அறிவியலில் நமக்கு புரியாத சில கோட்பாடுகளை நமக்கு புரியும்படி எளிமையாக கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங். அவருக்காக நாணயம் வடிவமைத்ததில் பெருமைபடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Share This Story

Top