நடந்தது என்ன ஸ்டாலின் - பாத்திமா பாபு
  • 16:08PM Mar 11,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 16:08PM Mar 11,2019 Chennai

நடந்தது என்ன ஸ்டாலின் - பாத்திமா பாபு

 

சில சமயங்களில் பொய் கூட உண்மை போன்று தோன்றும் உண்மை பொய்  போல தோன்றும் அது போலத்தான் பல வருடங்களுக்கு முன் பரவிய செய்தி தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்களின் இளமைக்காலத்தில் அப்போதைய தூர்தர்ஸன் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபுவை கடத்திச் சென்று மிரட்டினார் என்பது அப்போதைய சூழ்நிலையில் இந்த வதந்தி காட்டு தீ போல பரவியது ஆனால் இந்த வதந்திக்கு எந்த பதிலும் சொல்லாத பாத்திமா பாபு தற்பொழுது அது குறித்து விளக்கமளித்துள்ளார்

de5c958bb0f75c65e6125271dc8a3eeb.jpg

 

 

தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த சமயத்தில் ஒருமுறை நான் சித்திரப்பாவை எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் வழக்கப்படி சீரியல் முடியும் வரை எனக்கு செய்தி வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த இடைவெளியில் என்னைச் செய்தி வாசிப்பாளராகக் காண முடியாத காரணத்தால் இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை அந்த செய்தி முற்றிலும் பொய்,இதை நம்புவதும், நம்பாததும் அவரவர் பாடு. ஆனால், இதன் காரணமாக ஒரு கட்சித்  தலைவரின்  பெயருக்கு களங்கம் விளைவிப்பது மாபெரும்  தவறு

 

என்று கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

Share This Story

துரை முருகன்

Top