#SRILANKABOMBBLAST: EASTER திருநாளைச் சோகமாக்கிய இலங்கை குண்டுவெடிப்பு!!! சிறப்புப் பார்வை!!!
  • 11:43AM Apr 22,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 11:43AM Apr 22,2019 Chennai

நேற்று உலகெங்கும் EASTER திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்த தருணத்தில், இலங்கையில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் குறிப்பிட்டு, CHURCH-கள் மற்றும் பொதுமக்கள் விசேஷங்களின் போது அதிகமாகக் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், மதரீதியான தாக்குதலாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தற்கொலைப்படைத் தாக்குதல் என்று இலங்கை அரசு தெரிவித்திருப்பது வேறு பல சந்தேகங்களையும் கிளப்பிவிட்டுள்ளது.

 

மூன்று இந்தியர்கள் உள்பட 215 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500-கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். U.N. பொதுச் செயலாளர் ஆண்டனியோ இலங்கை குண்டுவெடிப்புகளைக் கண்டித்துள்ளார். “கிறிஸ்தவர்களின் புனித நாளான EASTER அன்று நடத்தப்பட்டுள்ள இந்த கொடிய தாக்குதல் கண்டனத்திற்குரியது. இலங்கைக்குத் துணையாக U.N. இருக்கும். புனித இடங்களை மதிக்க வேண்டும்” என்று அவர் TWEET செய்துள்ளார்.

 

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து SPECIAL MEDIA WING தொடங்கப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இருந்த இந்த அமைப்பானது, விடுதலைப்புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட போது, 2009ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி மீண்டும் இலங்கையில் இருந்து வெளிவரும் செய்திகள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர்தான் வெளிவரும் என்று தெரிய வருகிறது. தாக்குதல்கள் தொடரலாம் எனப் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. SOCIAL MEDIA-க்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது என்றும் மாலை ஆறு மணியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலை மற்றும் தெமடகொட ஆகிய இடங்களில், என மொத்தம் 8 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வரும் பாதையில் சோதனைகளும் இடம்பெறும். அத்துடன் பார்வையாளர் பகுதி மூடப்பட்டுள்ளது. விமானப் பயணிகளைத் தவிர ஏனையவர்கள் வளாகத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, குண்டுவெடிப்புப் பகுதிகள் பெரும்பாலும் தமிழீழப் பகுதிகள் என்பதாலும், திரும்பத் திரும்ப, தற்கொலைப்படைத் தாக்குதல் என்று அரசு கூறி வருவதாலும், விடுதலைப் புலிகளின் பெயருக்கு எதிராக அரசின் சதி இது என்றும் மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எது எப்படியாக இருந்தாலும், இதற்குக் காரணமாக இருப்பவர்கள் கண்டிப்பாகத் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும், ஆதங்கமாகவும் இருக்கிறது. நடக்குமா???

POCSO E-Box.  |  Tax on Ground Water.  |  Fake Doctor.  |  MSME Loan Shocker.  |  Blue Economy Facts.  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top