Highrise

எல்லாமே எல்லாத்துக்கும் பொதுவானது தானே? இந்த உண்மையை புரிஞ்சுக்காம இவ்வளவு கொ டுமையான தண்டனை கொடுப்பீர்களா? இது எந்த வகையில் நியாயம்?

Jun 10 2021 08:24:00 AM

உலகம் அனைத்து விதமான உயிர்களுக்கும் பொதுவானது என்பதை யோசிக்க பல நேரங்களில் மனிதன் மறந்து விடுகிறான். விலங்கு, பறவை, பூச்சி என்று எல்லா உயிர்களுக்கும் இந்த பூமியில் வாழ்வதற்கும் பூமியின் வளங்களை அனுபவிக்கவும் உரிமை உள்ளது. அப்படியிருக்க செல்வச்செழிப்பு மிக்க அமெரிக்க நாட்டில் அந்தக்காலத்தில் ஏன் இப்படி ஒரு வினோத அறிவிப்பை வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.

squrill-latest

1918ம் ஆண்டு முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அமெரிக்கா அணில்களுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தது. இது கேட்பதற்கே சற்று விசித்திரமாக இருக்கலாம். இருந்தாலும் இது வரலாற்றில் நடந்த உண்மைச்சம்பவம். 1918ம் ஆண்டு மட்டும் அணில்களால் சுமார் 30 மில்லியன் டாலர் மதிப்புள்ள உணவுப்பொருள்கள் வீணாகியது. அவை அதை வீணடிக்கவில்லை. தனக்கு தேவையான உணவை அது எடுத்து சாப்பிட்டது என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

squrill-latest

இதன் காரணமாக அமெரிக்க அரசாங்கம் கடுமையாக ஒரு முடிவை எடுத்தது. நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அணில்களை வேட்டையாடும் ஒரு போட்டியை அறிவித்தது. அந்த போட்டியின் விதிமுறை என்னவென்றால் மாணவர்கள் அணிலை வேட்டையாடி அதன் வால் பகுதியை வெ ட்டி அரசுக்கு அனுப்ப வேண்டும். அதிகமான அணில்களை வேட்டையாடும் மாணவருக்கு 50 டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு சாதாரண உயிரினத்தை இப்படி செய்யலாமா? இது சரியான அணுகுமுறையா என்று யோசித்து பாருங்கள் மக்களே.

squrill-latest