Special Talent : 'பயர்' ஆகும் 'டயர்' - இந்த மனிதனின் திறமை மிக அருமை!
  • 15:19PM May 04,2019 Africa
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 15:19PM May 04,2019 Africa

வித்தியாசமான திறமைகள் சாதாரண மனிதர்களிடம் இருந்து தான் பிறக்கின்றன. அவர்களுக்கு தான் ஒன்றை செய்ய வேண்டும் என்றால் எப்படி சிக்கனமாக யோசித்து அதனை மாற்று வழியில் செய்யலாம் என்ற யோசனை பிறக்கும். உதாரணத்திற்கு கிராம புறங்களில் துணிக்கு போடும் நீல டப்பாவில் லைட் ஸ்விட்ச்களை வைத்திருப்பார்கள். எண்ணெய் ஊற்றும் டின்னை, தானியங்கள் சேமிக்கும் கலனாக மாற்றி இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு விசயத்திலும் ஒரு புதுமை சாதாரண மனிதர்களிடமே பிறக்கிறது. இதுவே பணம் படைத்தவர்கள் என்றால், ஒன்றை தூக்கி எறிய தான் மனம் வருகிறதே தவிர, அதனை இன்னொரு வழியில் மறுசுழற்சி செய்ய முடியும் என்பதை மறந்து விடுகின்றனர். அந்த வகையில் தேவையில்லை என்று தூக்கி எறியப்பட்ட வாகன டயர்களை கொண்டு, கலைநயம் கொண்ட உருவங்களை உருவாக்கி வருகிறார் இந்த மனிதர். வெறும் பிஞ்ச டயர் தானே, இதை வைத்து இவர் என்ன செய்யப்போகிறார் என்று நினைப்பவர்களுக்கு இறுதியில் ஏமாற்றத்தை பரிசாக தருகிறார்.

#1. டயர்களின் தன்மையை உற்று நோக்குகிறார்.

#2. டயர்களை வெட்டியெடுத்து அதில் குரங்குகளின் உருவம் செய்கிறார்.

#3. டயர்களின் கிரிப்புகளை கொண்டு முழு வடிவம் பெற்ற குரங்கு வடிவத்திற்கு இறுதி மெறுகூட்டல் செய்கிறார்.

#4. டயர்களை பின்னிபிணைந்து உருவாக்கப்பட்ட காளை உருவம்.

#5. காளை உருவம் இறுதி வடிவம் பெறுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம்.

#6. டயர்களை கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்ட காளை உருவத்தின் இறுதி உருவமைப்பு

#7. டயர்களை வெட்டி வெட்டி ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட முதலை உருவம்

#8. சிறிய அளவிலான டயர் துண்டுகளை கொண்டு உருவாக்கப்பட்ட முயலின் உருவம்

#9. காளை உருவம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்.

#Special Talent : இப்படி ஆச்சர்யப்பட வைக்கும் திறமைகள் கொண்ட பலர் நம்மை சுற்றியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை போன்ற திறமையானவர்களுக்கு நாம் கொடுக்கும் வெகுமதி, இது போன்ற திறமைகளை பயன்படுத்திக்கொள்பவர்களை கண்டறிந்து இவர்களுக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கச்செய்வதேயாகும். (#talent hunt : நாவில் தலைகீழாய் நடனமாடும் தாத்தா - ஒரு நிமிஷம் பேச்சு மூச்சே இல்ல நமக்கு!)

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top