#opticalillusion: கண்ணாடி அணிபவர்களின் கவனத்திற்கு! இது போன்ற குறியீடுகளை பார்த்ததுண்டா?
  • 14:49PM Oct 05,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 14:49PM Oct 05,2019 Chennai

பெரும்பாலான மக்கள் தங்களுக்கு மூக்குக்கண்ணாடி வாங்குகையில்  அதன் அளவை பார்ப்பதில்லை. தங்களுக்கு பிடித்தவாறு, ஏற்றவாறு  இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கிறார்கள். கண்ணாடிக்கு என்ன அளவு? இப்படி ஒன்றை கடைக்காரர் இதற்கு முன்னதாக இந்த  அளவுகள் குறித்து உங்களிடம் கூறியது உண்டா? இல்லையெனில் மேலும் தெரிந்துகொள்ள , உதாரணத்திற்க்கு படத்தில் உள்ள கண்ணாடியை எடுத்துக்கொள்வோம்.  அதில் JE16026 50–18–138-C02 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விளக்கம் என்ன என்பதை காணலாம். இந்த அளவீட்டில் உள்ள 138, 18 மற்றும் 50 என்ற எண்கள் எதனை குறிக்கிறது என்றால், 

138 ஆனது, கண்ணாடியின் பிடிப்பிற்கு உதவும்  இரு TEMPLES எனும் தாங்கியை குறிக்கிறது.

18 ஆனது இரு லென்சுகளுக்கும் இடைப்பட்ட தூரத்தை குறிக்கிறது. இந்த அளவு சரியாகஇருந்தால் மட்டுமே கண்கள்  சரியாக லென்ஸிற்கு பொருத்தமாக அமையும்

50 ஆனது ஒவ்வொரு லென்ஸின் அளவை குறிக்கிறது.விசிபிலிட்டி அதிக அளவு பரப்பை கவர் செய்ய வேண்டும் என விரும்பினால்  இந்த அளவு அதிகரிக்கும்.

 எப்படி காலணி, உடைக்கு அளவு இருக்கிறதோ அதேபோல் ஒவ்வொரு மூக்குக்கண்ணாடிக்கும் சிறப்பான  அளவு உண்டு. பலர் முகத்திற்கு ஏற்றாற் போல தேர்வு செய்கிறார்களே தவிர கண்களுக்கு வசதியான ஒன்றா என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள்.சிறிய வகை லென்ஸ்களை தேர்ந்தெடுக்கும் போது, கண்ணின் ஓரங்களின் லென்ஸ் கவராகாத காரணத்தால், கார்னர்களில்  உள்ள ஆப்ஜெக்டுகளை பார்க்க தலையையே திருப்புகிறோம்.இதனால் கண்மணி நகராமல் ஒரே மாதிரியான நேர்கோட்டு இயக்கத்திற்கே பழக்க படுத்துகிறோம். இது போன்ற அளவீடுகளை ஆப்டிக்களில் கேட்டு தெரிந்து  கொண்டு அதற்கேற்றாற் போல தேர்ந்தெடுங்கள். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top