BITCOIN – ஒரு சிறப்புப் பார்வை.
  • 14:47PM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:47PM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India

சமீபகாலமாய் ஒரு பெயர். பல்வேறு தளங்களில் அடிபட ஆரம்பித்து, இன்று இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் கூட உச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.  அப்படி என்னதான் இருக்கிறது இதில் என்றால், எதிர்காலம் என்று கூடச் சொல்லலாம்.  அந்தப் பெயர் – BIT COIN. 

பிட் காயினா அப்படி என்றால்?

பிட் காயின் என்பது இணைய பணம் அல்லது டிஜிட்டல் கரன்சி என்று சொல்லலாம். இதன் பெரிய வசதி என்பது இதனைப் பயன்படுத்தி நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நேரடியாக அனுப்பலாம் – பேங்க் அல்லது இடைத்தரகர்கள் எவருமின்றி… ஸடோஷி நகமோடோ என்பவரால் 2009-ல் உருவாக்கப்பட்ட ஒரு கணினி மென்பொருள்தான் பிட்காயின்.  இதுவும் இணையம் போலவே யாருக்கும். எந்த நாட்டிற்கும் தனிப்பட்ட சொந்தம் அல்ல. ஒரு பொது மென்பொருள்…

பொது மென்போருள் என்றால் அதன் பாதுகாப்பு???

பொது மென்பொருள் என்றால் அது தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு அல்ல.  இதன் பின்னால் ப்ளாக் செயின் என்கிற செயலி இருக்கிறது.  இந்த ப்ளாக்செயின், மைனர்ஸ் எனப்படுபவர்களின் உதவியோடு - நடக்கும் அத்தனை செயல்பாடுகளையும் தன்னுள் பதிய வைத்துக் கொள்கிறது.  மைனர்களின் வேலையே அந்தச் செயல்பாடுகளை ப்ளாக்குகளாக மாற்றித் தருவதுதான்.  அவர்களுக்கான சம்பளமும் பிட்காயின்தான்.  சராசரியாக ஒரு பிட்காயினின் மதிப்பு இன்று 3,28,000 ரூபாய்.  மைனர்களின் சம்பளம் 7 புதிய பிட் காயின்கள். அவர்கள் ப்ளாக் சரியா அல்லது தவறா (திருத்தியமைக்கப்பட்டதா) என்பதை அந்தச் செயலியே கண்டுபிடித்து தண்டித்து விடும். அதாவது சம்பளத்தை கட் செய்துவிடும். இதன் காரணமாக மைனர்கள் மிகத் துல்லியமாக ப்ளாக்குகளை உருவாக்குகிறார்கள். 

இந்தியாவில் பிட் காயின் பயன்பாடு

இந்தியாவில் அதற்கான பயன்பாடு பெரிய அளவில் இல்லையென்றாலும், தற்போது நிறையப் பேர் பரிசோதனை முறையில் பிட் காயினை வாங்கி வருகின்றார்கள்.  செப் பே(Zeb Pay) போன்ற செயலிகள் பிட்காயினை வாங்கவும், விற்கவும் வழிவகை செய்கிறது.  வெகு விரைவில் பிட் காயின் புழக்கத்தில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது. இன்று பெரிய மனிதர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை, நாளை மொத்த இந்தியாவுமே பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top