ELECTRIC TRAINS: MAINTENANCE-காக ரயில்கள் ரத்து!!! SOUTHERN RAILWAY அறிவிப்பு!!! ஞாயிறு ரத்து செய்யப்படும் வழித்தடங்கள்!!!
  • 13:05PM Mar 15,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 13:05PM Mar 15,2019 Chennai

MAINTENANCE காரணமாக வரும் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று SOUTHERN RAILWAY அறிவித்துள்ளது. இது குறித்து SOTHERN RAILWAY வெளியிட்ட அறிக்கையில், “மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படும். அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், பிற்பகல் 1.50 மணிக்கு ஆவடி - பட்டாபிராம் சைட்டிங் வரையும், காலை 9.45 மணிக்கு மூர்மார்க்கெட் - அரக்கோணம் வரையும், காலை 11.55, 1.50, 2.25 மணிக்கு அரக்கோணம் - திருத்தணி வரையும், பிற்பகல் 1.15 மணிக்கு திருவள்ளூர் - மூர்மார்க்கெட் வரையும், காலை 11.10 மணிக்கு ஆவடி - அரக்கோணம் வரையும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து 17-ம் தேதி காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 9.50, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40, 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படும். அதே போல், வேளச்சேரியில் இருந்து காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30 மற்றும் 1.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2.10 மணி முதல் வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு SOUTHERN RAILWAY வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால், மக்கள் ஞாயிறன்று தங்கள் பயணத்திட்டத்தில் கூடுமானவரை ELECTRIC TRAIN-களை நாடாமல், வேறு பயண ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்வது நல்லது!!!

Share This Story

You Might Also Like These
Related Stories
Top