#Marriage திருமணம் என்றாலே முகத்தைச் சுளிக்கும் தென் கொரிய பெண்கள்! என்ன காரணம்?
  • 22:21PM Oct 28,2019 South Korea
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 22:21PM Oct 28,2019 South Korea

இந்தக்காலத்தில் படிக்கும் பெண்கள், வேலைக்குச் சென்று தங்களின் திறனை உயர்த்திக்கொண்டு பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். சில பெண்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாகத் தங்களின் திருமணத்தைத் தள்ளிபோடுவார்கள். ஆனால் எப்படியும் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால் சில வெளிநாடுகளில் பெண்கள் தங்களது திருமணத்தைத் தள்ளிபோடுகின்றனர், இதனால் அந்நாட்டின் குழந்தை பிறப்பு விகிதம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நாடு தென் கொரியாவாகும்.

#LOVEFIGHTS: தம்பதியருக்குள் சண்டை வருவது இயற்கையா??? எதற்காக என்று தெரியுமா???

Related image

கடந்த 10 ஆண்டுகளில் தென் கொரியாவின் வளர்ச்சி உலகையே வியக்கவைத்தது. அந்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தூணாக இருந்தது கொரிய பெண்கள் தான். ஆண்கள் செய்வது போல 10 மணி நேர வேலையையும் சலிக்காமல் செய்தனர். கொரிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பெண்களின் உழைப்பு அதிமாக இருப்பதாக அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதே பெண்கள் வேலையில் கவனம் செலுத்துவதால் தங்களுக்குத் திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணமே ஏற்படுவதில்லை என்று தெரிவிக்கின்றனர். திருமணம் செய்வதால் தங்களின் வேலைக்குப் பிரச்சனை ஏற்படுவதாகவும், வேலையில் கவனம் செலுத்தமுடியவில்லை என்றும், தங்களுக்கான வாய்ப்புகள் குறைவதாகவும் தெரிவிக்கின்றனர். ஒருவகையில் ஆண் ஆதிக்கத்தின் காரணமாகவே தங்களுக்குத் திருமணம் மீது ஈர்ப்புக் குறைவதாகத் தெரிவிக்கின்றனர். இந்தப் பெண்கள் திருமணத்தைத் தள்ளிபோடுவதால் அந்நாட்டின் குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படுகிறது.

Image result for korean women

இதுகுறித்து அந்நாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் கூறுகையில், இங்குப் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்தாலும் அவர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. இங்குத் திருமணமான பெண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை விடத் திருமனாகாத பெண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். திருமணமாகாத பெண்களுக்கு அனைத்து நிறுவனங்களிலும் வாய்ப்புள்ளது, அதுவே திருமணமாகி, குழந்தை உள்ள பெண்களுக்குச் சில நிறுவனங்களில் சம்பளம் கூடச் சரியாகக் கிடைக்காது. முக்கியமாக அவர்களை வேலையை விட்டு நீக்கவே அதிகமாக முயற்சிப்பார்கள். இதனால் பெரும்பாலான பெண்கள் தங்களின் வேலையைத் தக்கவைத்துக்கொள்வதற்குத் திருமணத்தைத் தவிர்த்து வருவதாகக் கூறுகின்றனர். இந்தப் பிரச்சனைக்குப் பெண்களைக் குறை சொல்வதா அல்லது சமூகத்தைக் குறை சொல்வதா என்று தெரியவில்லை!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top