பொள்ளாச்சி – தென்னிந்தியாவின் ஹாலிவுட்…
  • 09:01AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:01AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India

மொத்தமா ஊருக்கு இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கத்துக்கு அரை மணி நேரத்துல நடந்தே போயிடலாம்… அப்படி ஒரு ஊரு பேரைக் கேட்டா, தென்னிந்தியாவோட ஹாலிவுட்னு சொல்றாங்க… அப்படி என்னதான் இருக்கு அந்த ஊர்ல??? ரொம்ப வருஷமா மாறவே மாட்டேன்னு அடம் பிடிச்சு திடீர்னு மாறின ஊரைப் பார்த்திருக்கீங்களா? இல்லாட்டி பொள்ளாச்சி பக்கம் வந்து பாருங்க… ஊருக்குள்ள கிடைக்காத பொருளே கிடையாது, அவ்வளவு பரபரப்பான கடைவீதி, ரொம்ப ஃப்ரெண்ட்லியான மக்கள் இதெல்லாம் ஊருக்கு ஒரு பெரிய பலம்.

அப்படியே ஊரைச் சுத்தி போனா எங்க பார்த்தாலும், தோப்பு துரவுன்னு - கேரளாவுக்கு அடுத்தபடியா தேங்காய் சப்ளைக்கு பொள்ளாச்சிதான். அதனாலயே ஊருக்குள்ள எப்படிப் போனாலும் மட்டை மில்லு ஒண்ணு இருக்கும்.  கொஞ்சம் ஊரைத் தாண்டிப் போனா வெளியே போறதுக்கு முன்னாடியே வால்பாறை மலை கண்ணுல பட ஆரம்பிச்சுடும்.  ஒரே ரோடுதான்.  வால்பாறை போற வழியில, இன்னைக்கும் புழக்கத்துல இருக்கற சமத்தூர் அரண்மனை (எஜமான்ல இரஜினி வீடு), அனுமார் கோயிலு (அமாவாசை அல்வா கொடுத்த கோவிலு!!!), வாய்க்காலுன்னு நேரம் போறதே தெரியாது.

பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு வெறும் 40 கி.மீ.தான். சரக்கடிச்சு போரடிச்சவனெல்லாம் கள்ளுக் குடிக்க பட்டுனு போயிட்டு வந்திடுவாங்க… அங்க மலம்புழான்னு… அது பத்தி நிறைய இருக்கு. தனிக் கட்டுரையாவே எழுதறேன். பொள்ளாச்சிக்கு பக்கத்துல இருக்கிற எந்தக் கிராமத்துக்கு போனாலும், எங்கயாச்சும் பார்த்த மாதிரியே இருக்கும். அத்தனை படத்துல காட்டிருக்காங்க… இப்போக் கூட நம்ம கார்த்தி நடிச்சு அழகுராஜான்னு ஒரு படம் வந்துச்சுல்ல… அதுல பூரா நல்லப்பா தியேட்டர்ல ஆரம்பிச்சு, பொள்ளாச்சியைத்தான வளைச்சு வளைச்சு காமிச்சிருந்தாங்க…

வெர்ட்டாங்கை (இடது கை) பக்கம் 80 கி.மீ. போனா பழநி மலை… சும்மா பக்தியோட சேர்த்து பஞ்சாமிர்தமும், மொட்டைல தடவுன சந்தனமுமா பார்க்கவே பரவசமாயிருக்கும்.  முதல் முதல்ல மலைக்கு மேலிருக்கிற கோயிலுக்குப் போக ரோப் கார் பார்த்ததே இங்கதான்.  அப்படியே போனா கொடைக்கானல்… இல்லை வேணாம்னு உடுமலையோட வண்டியைத் திருப்பிட்டு கேரளா பார்டரு தாண்டிப் போனா மூணாறு... (நம்ம மைனா படம் எடுத்தாங்கல்ல – அது இங்கதான்!!!)

பொள்ளாச்சியிலிருந்து சேத்துமடை பக்கமா டாப் சிலிப். இந்த யானைக்கெல்லாம் புத்துணர்வு முகாம் நடத்துவாங்களே!!! - அது இங்கதான் நடக்கும். காட்டுக்குள்ள யானை மேல சவாரியெல்லாம் போலாம்.  உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தா புலியைப் பார்க்கலாம், புலிக்கு அதிர்ஷ்டமிருந்தா உங்களைப் பார்க்கும்… அங்கிருந்து பரம்பிக்குளம் போற வழி மொத்தமும் ஒரே காடுதான்.  அம்புட்டு அழகு, அத்தோட ஆபத்தும்.  சாயங்காலம் கண்ணாடி மாளிகை முன்னாடி புல் மேய வர்ற மானையெல்லாம் நாள் பூரா பார்த்துட்டேயிருக்கலாம்.

அப்படியே கோயமுத்தூர் பக்கம் போனா ஈச்சனாரில ஒருவாட்டியும். புலியகுளத்துல ஒரு வாட்டியும் (சின்னக் கோயில், ஆனா ரொம்பபபபபபபபபபபப் பெரிய பிள்ளையாரு…) பிள்ளையாருக்கு வணக்கம் வச்சுட்டு நேராப் போனா 200 கி.மீ.ல ஊட்டி… எல்லாப் படத்துலயும் பார்த்த இடம்தான்னு மட்டும் நினைக்காதீங்க, ஒவ்வொரு வாட்டி போறப்பவும், பொள்ளாச்சில புதுசா ஏதாச்சும் கண்டிப்பா இருக்கும்… அம்புட்டுதான்…

என்னது வெயிலா??? அது அவ்வப்போது வந்துட்டுப் போகும், விருந்தாளி மாதிரி… வரட்டுங்களா???  

   

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top