SOUND POLLUTION: ஒலி மாசா அதிகரிக்கும் காது கேளாமை பிரச்சினைகள்!!! அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 900 MILLION மக்கள் பாதிக்கப்படும் அபாயம்!!!
  • 16:00PM Mar 07,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:00PM Mar 07,2019 Chennai

பண்டைய காலத்தில் அதிகபட்சம் நாம் கேட்டுக் கொண்டிருந்த ஒலி என்பது இயற்கையானவையாக இருந்தது. பெரும்பாலும், பறவைகள், விலங்குகள் ஓடைகள் போன்ற சப்தங்கள் மற்றும் இசை இவைதான் நம் காதுகளுக்குக் கேட்கக் கிடைத்துக் கொண்டிருந்தவரையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஆனால், பெருகிய வாகனங்கள், இயந்திரங்கள், சினிமா, காதுக்குள்ளேயே இசையைக் கொண்டு சேர்க்கும் HEADPHONE-கள் என்ற பல்வேறு நவீன யுகக் கண்டுபிடிப்புகள் நம் உடல் உள்ளம் என்று அனைத்திற்கும் கேடு விளைவிப்பதாக மாறிவிட்டது. என்னதான் HEADPHONE-கள் பயன்பாடு மனஅழுத்தத்திற்குக்கு காரணம் என்று சொன்னாலும், அது இல்லாமல் இன்று பெரும்பாலான மக்களால் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலை இப்படியே நீடித்தால், அதாவது SOUND POLLUTION-லிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றிய கட்டுரை இது.  

இன்றைய தேதியில் உலகம் முழுவதும் 466 MILLION மக்கள் காது கேளாமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 2050-ம் ஆண்டில் 900 MILLION மக்களை எட்டும் என்று WORLD HEALTH ORGANISATION - WHO மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவிக்கிறது. 12 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் காது கேளாமையினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒரு BILLION-ஐத் தாண்டும் என்ற தகவலே அச்சுறுத்துகிறது. அதாவது உலகத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட மூன்றில் ஒருவருக்கு காது கேளாமை பிரச்சினை வரக்கூடும் என்று சொல்கிறது இவர்கள் அறிக்கை. பாரம்பரிய மரபணுக் கோளாறு, கிருமித்தொற்று, ஒலி மாசு, வயதாவதைத் தடுப்பதற்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள், தொடர்ந்து அதிக ஒலிகளை ஏற்படுத்தும் இடங்களில் பணியாற்றுவது உள்ளிட்ட பல காரணங்களால் காது கேளாமை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கான சிகிச்சையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலமாகவே இதனை கட்டுப்படுத்துகிறார்கள்.

குழந்தைகளை பொருத்தவரை அவர்களை தாக்கும் RUBELLA VIRAL FEVER, மூளைக்காய்ச்சல், MUMMS எனப்படும் பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால்தான் காது கேளாமைக்கு ஆளாகிறார்கள். இது போதாதென்று தற்போதைய இளைய தலைமுறையினர் FULL VOLUME வைத்துக் கொண்டு பாடல்களைக் கேட்பது, பயணித்துக் கொண்டே பேசுவது போன்ற பழக்கத்திற்கு ரொம்பவே அடிமையாகிவிட்டனர்.  ஒவ்வொருவரும் பரிந்துரைக்கப்பட்ட DECIBEL-களை விட அதிக அளவிலான DECIBEL-களில்தான் எதையும் கேட்கிறார்கள். இதைக் குறைத்துக் கொண்டு, காதுகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து, இதற்குரிய பாதிப்பினை தொடக்க நிலையில் கண்டறிந்து, அதற்கு தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காது கேளாமையால்அதிக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, அவர்களின் ஐந்து வயதில் பொருத்தமான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் எதிர்பார்த்த முழுமையான பலன் கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அளவாகப் பயன்படுத்தினால், நிறைவாகப் பயன்படுத்த முடியும் என்று சும்மாவா சொன்னார்கள்!!!

Share This Story

You Might Also Like These
Related Stories
Top