குடியுரிமை பெற்ற ரோபோ!!!
  • 13:58PM Oct 28,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:58PM Oct 28,2017 Chennai, Tamil Nadu 600003, India

சௌதி அரேபியா சோபியாவுக்குக் கொடுத்த குடியுரிமை மூலம் உலகத்தின் மொத்தப் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.  காரணம் சோபியா பெண் அல்ல, ரோபோ… துபாயில் ரோபோ 2.0 ஆடியோ லாஞ்ச் நடந்து கொண்டிருக்கும் போது சப்தமில்லாமல் சௌதி அரேபியா சோபியா என்னும் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி, ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய முதல் உலக நாடு என்ற பெயரையும் தட்டிச் சென்றுள்ளது. 

ஹான்சன் ரோபோட்டிக்ஸ் என்ற ஹாங்காங் நிறுவனம் தயாரித்த இந்த ரோபோ மேடையில் வந்து வாசகர் கேள்விகளுக்கு பதிலும் சொல்லி அசத்தியிருக்கிறது.  அது மட்டுமல்ல மனித முகபாவங்களை எந்த அளவிற்கு அந்த ரோபோவால் வெளிப்படுத்த முடியும் என்பதையும் செய்து காட்டியிருக்கிறது.  உலக அரங்கில் பிரபலமான சோபியா பேசும் பொழுது, “நான் மனிதர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். மனிதர்களைப் புரிந்து கொள்வதுடன், பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முகபாவங்கள் தேவையாக இருக்கிறது...” என்று சொல்கிறது. 

மேலும் ரோபோக்களால் தாங்கள் ரோபோக்கள் என்பதை அறிந்து அதற்கேற்றவாறு தன்னிச்சையாகச் செயலாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு, “சரி, இதே கேள்வியை நான் திரும்ப – நீங்கள் மனிதர்கள் என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டால் பதில் சொல்ல முடியுமா?” என்று கேட்டு அசத்தி இருக்கிறது இந்தச் சுட்டி ரோபோ… மேலும், “என்னுடைய செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தை மனிதர்களுடைய நல்வாழ்விற்கும், நவீன வீடுகளை வடிவமைப்பது மற்றும் தலைசிறந்த தொழில்நுட்பம் நிறைந்த நகரங்களை உருவாக்குவது போன்ற வழிகளில் பயன்படுத்தப் போகிறேன்… உங்கள் உலகைச் சிறப்பிக்க என்னால் ஆனதைச் செய்வேன்…” என்றும் உறுதியளித்திருக்கிறது.

தனக்கு குடியுரிமை வழங்கப்பட்டதைப் பற்றிச் சொல்லும் போது சோபியா, “இந்தத் தனித்துவம் வாய்ந்த சிறப்பை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.  உலக வரலாற்றில் முதல்முறையாக என்னைப் போன்ற ஒரு ரோபோவுக்கு குடியுரிமை அளித்திருப்பது பெருமையளிக்கிறது…” என்று சொல்லி முடிக்கிறது.  கேட்க நல்லாத்தான் இருக்கிறது.  ஆனாலும் இன்னொரு பக்கம் ரோபோ மனிதர்களை ஆளும், அடிமைப்படுத்தும்னு சொல்றதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.  எது எப்படியோ, ஆரம்பிச்சு விட்டுட்டாங்க – என்னதான் நடக்குதுன்னு பார்த்திடலாமே… 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top