Rainforest

இந்த தீவுக்குள் காலடி எடுத்து வைத்தால் உசுருக்கு உத்திரவாதம் கிடையாது என்கிறார்களே! அப்படி என்ன பயங்கரமான உயிரினம் இங்கு மறைந்திருக்கும்?

Oct 01 2021 02:54:00 PM

எந்த மர்மமான உயிரினமும் இங்கு மறைந்திருக்கவில்லை. கண்ணுக்கு முன்னாடியே கொத்துக்கொத்தாக பாம்புகள் மட்டும் இருக்கும் அவ்வளவுதான். என்னது கொத்துக்கொத்தா பாம்புகளா என்று பீதியடைய வேண்டாம். ஏனெனில் இங்கு செல்ல உங்களுக்கு அனுமதி கிடையாது. பிரேசில் நாட்டில் இருக்கும் பாம்புத்தீவில் மனிதர்களுக்கு எந்த வேலையும் கிடையாது.

snake-island-brazil

முழுக்க முழுக்க பாம்புகளால் சூழப்பட்டுள்ளதால் இந்த தீவின் பெயரே பாம்புத்தீவு என்று மாறிவிட்டது. இந்தத்தீவின் உண்மையான பெயர் இல்ஹா டி கெய்மாதா கிராண்டி என்பதாகும். இந்தப்பெயர் வாயில் நுழையவில்லையெனில் விட்டுவிடுங்கள். பாம்புத்தீவு என்று சொன்னால் எளிதில் எல்லோரும் தெரிந்து கொள்வாங்க.

snake-island-brazil

இந்த தீவு மிகவும் சிறிய பரப்பளவையே கொண்டுள்ளது. 106 ஏக்கர் மட்டுமே இருக்கும் இந்த தீவு பல கொடிய விஷப்பாம்புகளுக்கு புகலிடமாக விளங்குகிறது. இதில் மிகவும் கொடுமையான விஷத்தன்மை கொண்ட பாம்பு என்று எடுத்துக்கொண்டால் அது கோல்டன் லேன்ஸ்ஹெட் வைப்பர் ஆகும். உலகின் மிகக்கொடுமையான விஷம் கொண்ட பாம்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

snake-island-brazil

இந்த தீவில் ஒரு சதுர மீட்டருக்கு குறைந்தது ஐந்து பாம்புகளாவது இருக்கும் என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்ததால் நிலப்பகுதியில் இருந்த சில கொடிய விஷப்பாம்புகள் இந்த தீவுக்கு அடித்து வரப்பட்டது. பிறகு இந்த தீவு முழுவதும் பாம்புகள் இனப்பெருக்கம் செய்து தங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டது.

snake-island-brazil

இங்கிருக்கும் விரியன் பாம்பு உங்களை கடித்தால் அடுத்த சில நிமிடங்களில் கடித்த இடத்தில் இருக்கும் சதை அப்படியே உருகிவிடுமாம். கொடிய விஷப்பாம்புகள் நிறைந்து காணப்படுவதால் இந்த தீவுக்குள் மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் கடற்படை வீரர்கள் மட்டுமே இங்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.