குட்டிக் கமாண்டோ படைவிரர்கள்…
  • 10:55AM Sep 13,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:55AM Sep 13,2017 Chennai, Tamil Nadu 600003, India

கோயமுத்தூர் பக்கத்துல மதுக்கரை ஊராட்சி ஒன்றியப் பள்ளியோட கிளைப் பள்ளியான மலுமிச்சம்பட்டி பள்ளி பசங்கதானுங்க அந்த குட்டி கமாண்டோஸ்… அப்படி என்ன பண்ணிட்டாங்கன்னு கேக்குறீங்களா?? பாரதப் பிரதமரு அறிவிச்ச தூய்மை இந்தியா திட்டத்தை யாரு சரியா செஞ்சாங்களோ இல்லையோ, இந்த ஸ்கூல்ல படிக்கற 10 வாண்டுக தெளிவா செஞ்சிருக்காங்க.  இதுக்காக கலெக்டர் கிட்ட அவார்டு கூட வாங்கிருக்காங்க…. 5-ம் வகுப்பு படிக்கற 10 பொடியனுக என்ன செஞ்சிட முடியும்னு நினைக்கறீங்க இல்லை… அவனுகதான் ஊரையே மாத்திருக்கானுக…

பொதுவா ஒன்றியம், ஊராட்சின்னாலே கொஞ்சம் ஊருக்கு ஒதுங்கினாப்லதான் இருக்கும். அதுனால இங்க வசிக்கிற நிறையப் பேரு ஒதுங்கறதே ஊருக்கு ஒதுங்கினாப்லதான்.  பசங்க எங்க கிராமத்தை எவனும் அசுத்தம் பண்ணிடக்கூடாதுன்னு முடிவு பண்ணி, காலைல 5 மணிலேர்ந்து 7 மணி வரைக்கும் ரவுண்ட்ஸ் வந்து, எங்கயாச்சும் யாராச்சும் ஒதுங்க நினைச்சா விசில அடிச்சு ஓட விட்ருகானுவ… இவங்க பண்ணின அக்கப்போருல ஊருல கொஞ்சம் வசதி இருக்கற அம்புட்டு பயலும் வீட்லயே பாத்ரூம் கட்டிட்டாங்க. மிச்சமீதி பேரு வேற வழியில்லாம பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க…

அட, அங்கயும் ஒரு ட்விஸ்ட் என்னன்னா, லைட் எரியலை, தண்ணி வரலைன்னு இவங்க கிட்ட சொல்லி, இந்த பசங்களே ஊராட்சி மன்றத்துல பேசி ஏற்பாடு பண்ணிக் குடுத்துருக்காங்க.  இப்பல்லாம் ஜன்னலைத் திறந்தாலே நல்ல காத்து வருதுன்னு முன்னாடி இவங்கள கரிச்சுக் கொட்டினவங்களே - இப்போ வெறும் 6 மாசத்துல, இவங்களை குட்டி கமாண்டோஸ்-னு செல்லமா கூப்பிட்டு திரியறாங்க…

எல்லா ஸ்கூல்லயும் என்னவோ சொல்லித் தராங்க, சொல்லித் தராங்கன்னு சொல்றாங்க… ஆனா இவங்கள மாதிரி பயலுக எல்லாம் வர்றதென்னவோ கவெர்மெண்ட் ஸ்கூல்ல இருந்துதான்… வெல்டன பாய்ஸ்…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top