Timeless

ஈமெயில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு தெரியுமா? வெறும் பதினான்கு வயது தமிழ் சிறுவனின் சாதனையை தான் இப்போது இந்த உலகமே கொண்டாடுகிறது!

Apr 21 2021 04:03:00 PM

நம்முடைய வாழ்க்கையில் நாம் கடக்கும் சில சாதாரண விஷயங்கள் ஒரு காலத்தில் மிகவும் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஈமெயில் அட்ரஸ் இல்லாதவர்கள் இந்த பூமியில் யாரும் இல்லை என்ற ஒரு நிலை தற்போது உருவாகி உள்ளது. அந்த ஈமெயிலை முதன் முதலில் கண்டு பிடித்தது யார் தெரியுமா? வெறும் பதினான்கு வயது தமிழ் சிறுவன் என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஈமெயிலை முதன் முதலில் கண்டு பிடித்தவர் சிவா அய்யாதுரை.

siva ayyathurai email inventor

இவர் இந்தியாவில் இருந்து தனது ஏழு வயதில் அமெரிக்கா சென்றார். அமெரிக்கா என்றவுடன் அங்கே இருப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் என்ற பிம்பம் உருவாகும். அப்படி ஒன்றும் கிடையாது. அங்கும் இந்தியாவைப் போன்று சாதாரண ஏ ழை க ஷ்டப்படும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர் முதலில் பேட்டர்சன் என்ற ஏ ழை நகரத்தில் குடியேறினார். பின்னர் அங்கிருந்து லிவிங்ஸ்டன் நியூ ஜெர்ஸி நகரத்திற்கு குடியேறினார்.

siva ayyathurai email inventor

சிறு வயது முதலே இவருக்கு படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் ஒரு கல்லூரி படிக்கும் மாணவன் படிப்புகள் அனைத்தையும் தனது ஒன்பதாம் வகுப்பிலேயே படித்து முடித்துவிட்டார். அதற்குப் பின்னர் அவர் படிக்க ஒன்றும் இல்லை. நியூயார்க் பல்கலைக்கழகம் சார்பில் படிப்பில் சிறந்து விளங்கிய 40 மாணவர்களை தேர்ந்தெடுத்து மென்பொருள் பயிற்சி அளித்தது. அதில் கலந்து கொண்ட இந்தியரும் இவர் ஒருவர் தான்.

siva ayyathurai email inventor

பின்னர் மைக்கேல்சன் என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தார். தனது பதினான்கு வயதில் மைக்கேல்சனிடம் வேலைக்கு சேர்ந்த போது அவருடன் வேலை பார்த்த அனைவரும் 30 வயதை கடந்தவர்கள். இருந்தாலும் இவருடைய வயதைப் பார்க்காமல் இவருடைய திறமையைப் பார்த்து இவருக்கு வேலை கொடுத்தார். அதற்கேற்ற மாதிரி சம்பளமும் கொடுத்தார்.

siva ayyathurai email inventor

மைக்கேல்சன் இவரிடம் ஒரு வித்யாசமான வேலையை கொடுத்துள்ளார். அதாவது மைக்கேல்சனிடம் நிறைய அலுவலகங்களும்,கல்லூரிகளும் இருந்துள்ளன. அவற்றில் உள்ள தகவல்களை பரிமாற என்ன செய்யலாம் என்று சிவா அய்யாதுரையிடம் கேட்டுள்ளார். அதற்காக சிவா அய்யாதுரை உருவாக்கியது தான் இந்த ஈமெயில். இப்பவும் சிவா அய்யாதுரை தனது பேட்டிகளில் சொல்லும் விஷயம் ஒன்றுதான். வெறும் 14 வயது சிறுவனால் ஈமெயில் கண்டுபிடிக்க முடியும் என்றால் இந்த உலகில் உள்ள அனைவராலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும் என்பது தான். ஈமெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம் அனைவரையும் பெருமைப்படுத்தும் விஷயமாக உள்ளது.

siva ayyathurai email inventor