Rainforest

#sindhugangadharan: யார் இவர்? ஒரு சாம்ராஜ்யமே இவரது கையில்! பணிக்கு செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியது!

Nov 06 2019 08:53:00 PM

ஜெர்மனிய முன்னணி தொழில்நுட்பமான SAP Labs India-இல் முதல் பெண் இயக்குனராக சிந்து கங்காதரன் தேர்வாகியுள்ளார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் படித்து  முடித்த உடனே இவருக்கு  பெங்களூரு IT park -இல் உள்ள  SAP Labs India-இல் வேலை கிடைத்தது. அதன் பின் 2001 லிருந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஜெர்மனியில் பணியமர்த்தப்பட்டார். பிறகு பெங்களூருவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.  தற்சமயம் SAP Labs  நிறுவனத்தில்  8,000-திற்கும்  மேலான குழுக்களுக்கு தலைமையேற்று வழிநடத்தி வருகிறார். 

தனது இந்த வெற்றிகரமான பயணம் குறித்து இவர் கூறியது, வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியையும் ரசிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.அதிலிருந்து வாழ்க்கை குறித்த சுவாரஸ்யத்தை கற்றுக்கொள்ளவேண்டும்.பெண்கள் வாழ்க்கையில் வேலை என்பது முக்கிய அங்கமாகும். தங்களுக்கு என்ன தேவை என்பதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். சொந்த வாழ்க்கையையும் பணியையும் சமநிலையில் வைத்துக்கொள்வது அவ்வளவு கஷ்டம் இல்லை என கூறியுள்ளார்.  மேலும் அவரது தாயார் இவரையும் இவரது சகோதரர்களையும் சமமாக நடத்தியதும் சாதனைக்கு முக்கிய காரணம் என கூறியுள்ளார்.  

இவர் ஜெர்மனியில் இருந்த போது, அங்கிருந்தவர்கள் ஜெர்மானிய மொழியை மட்டுமே பேசியதாவும் இவர் மகப்பேறு விடுப்பில் இருக்கையில் ,  அங்கிருந்தவர்கள் இவருக்காக ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டதாகவும் தனக்காக ஊழியர்கள் மாறும்போது நாமும்  புதிய உத்வேகத்துடன் கூடிய மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதை உணர்ந்துள்ளார். அதன் பிரதிபலிப்பே ஒற்றுமை, வாடிக்கையாளருடன் திருப்திகரமான அணுகுமுறை என கூறியுள்ளார். 

பெரும்பாலான குடும்பங்களில் பெண் குழந்தையை ஆண்களுக்கு நிகராக வளர்ப்பதில்லை, அப்படி வளர்த்து பணிக்கு போனாலும் மகப்பேறுவிற்கு பின்னர் அவர்களது  பணிசூழல் அவர்களுக்கு சாதகமாக இருப்பதில்லை. குடும்பம்,வேலை என இரண்டையும் சமநிலைப்படுத்த முடியாமல் தனது ஆசையையும் எதிர்காலத்தையும்  விட்டுக்கொடுக்கும் மனோபாவத்திற்கு வந்துவிடுகிறார்கள்.எப்படி இருந்தாலும் குடும்பத்தை விட்டுக்கொடுக்க முடியாது..    சிந்து கங்காதரன்  போன்ற ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக உள்ளனர். இவரும் கண்டிப்பாக இது போன்ற அசாதாரண சூழலை கடந்துவந்திருப்பார்,பொதுவாகவே சாதனை பெண்களின் சாதனைக்கு பின்னால்  அவர்களது குடும்பத்தின் ஆதரவு இன்றி சாத்தியம் இல்லை என்பது பொதுவான பெண்களின் கருத்து.#hiring: நேர்காணலின் போது நடக்கும் சுவாரஸ்யமான சம்பவம்! நீங்க இது போன்ற சூழலை சந்தித்தது உண்டா?