#lovehacks: ஒருவர் நம்மை காதலிக்கிறாரா? என்பதை அறிந்து கொள்ள சிம்பிள் டெக்னீக்! காதல் வெளியே தெரியாமல் இருக்க எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்க!
  • 16:25PM Oct 09,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 16:25PM Oct 09,2019 Chennai

காதலை சொல்லி நம்மை ஒருவேளை புறக்கணித்து விட்டால்,  இருக்கும்  நல்ல நட்பும்  காணமல் போய்விடும் என எண்ணிக்கொண்டே பல காதல்கள் இறுதிவரை சொல்லப்படாமலே இருந்து விடுகிறது. காதல் உள்ளதா என்பதை கன்பார்ம் செய்துகொள்ளாமலே உளறி,  இருக்கும் நட்பை கெடுத்துக்கொண்ட கதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி காதலை சொல்வதற்கு முன்னர் எதிர்பாலினத்திற்கு உங்கள் மீது ஈர்ப்பு உள்ளதா என்பதை அறிந்துகொள்ள சில எளிய டிப்ஸ்..

இது சினிமாத்தனமான செயலாக தெரியலாம்.ஆனால் இதை முயற்சி செய்து பாருங்க,உங்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் மாற்றத்தை உற்றுநோக்குங்க. சாதாரணமாக நம் கண்கள் இப்படித்தான் இருக்கும்.

ஆனால் வியப்பான அல்லது பிடித்தவர்களை காணும் போது கண்மணி (pupil) மாறுவதை ஆழமாக கவனித்தால் விளங்கும்.அடுத்து எதிர்பாலினம் நிற்கும் போதும் , உட்கார்ந்திருக்கும் போதும் சரி நீங்கள் இருக்கும் திசை நோக்கி லேசாக சாய்ந்து இருக்குமாறு அமர்ந்திருப்பார்கள். நீங்கள் இருக்கும் பொழுதுகளில் ஏதவாது  ஒரு பதட்டத்துடனேயே தான் இருப்பார்கள்,  வாய் மட்டும் சிரித்தவாறு இருக்கும். யாரவது எதாவது கேட்டால்,பதட்டம் இல்லாதவாறு உங்களை இம்ப்ரெஸ் செய்யும் நோக்கத்துடன் பதில் இருக்கும்.உற்றுக்கவனித்தால் அவர்கள் பயன்படுத்திய ஒரே வார்த்தைகள் அடிக்கடி  பயன்படுத்துவதை கவனிக்கலாம். 

 உங்களை கண்டுகொள்ளாதவாறு இருப்பார்கள் ஆனால் உங்களது ஒவ்வொரு அசைவையும் அப்டேட் செய்துகொள்வார்கள்.நீங்கள் அடிக்கும் மொக்கை ஜோக்ஸ் எல்லாம் பிரமாதமான நகைச்சுவை என்று கருதி  சிரிப்பார்கள். மேற்க்கண்ட டெக்னிக்குகளை வைத்து ஓரளவு காதலிக்கிறாரா இல்லையா என்பதை கணிக்க முடியும். இதன்மூலம் அவர்களிடம் தைரியமாக காதலை கூறலாம்.. 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top