#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா ? சிம்புவே கொடுத்த விளக்கம்
  • 20:32PM May 25,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 20:32PM May 25,2019 Chennai

ஒரு சில தினங்களாக சிம்புவின் திருமணம் குறித்த வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன.என்னவென்றால் தன் உறவுக்கார பெண்ணை சிம்பு கூடிய விரைவில்திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும்,விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்புவிற்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் இணையத்தில் வைரலான வண்ணம் இருந்தன.எப்போதும் சிம்பு குறித்த ஏதோ ஒரு செய்தி இணையத்தில் வைரலானவாறு இருக்கும், ஆனால் இந்த செய்தி காட்டு தீ போல பரவ ஆரம்பித்துவிட்டது..யாரு தான் இதையெல்லாம் கிளப்புகிறார்களோ? இது பற்றி சிம்பு விளக்கம் கொடுத்து ட்விட்டரில் ஒரு பிரஸ் ரிலீஸ் செய்துள்ளார்.

STRPressRelease

In particular, I have been coming across some rumours involving my marriage. I would like to make it clear that there are no such plans as of now and I will make the affirmation regarding this at the appropriate time through the proper channel. #STRPressRelease

— Done Channel (@DoneChannel1) May 25, 2019

பிரஸ் ரிலீஸில் இப்போதைக்கு தனக்கு திருமணம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் சரியான நேரத்தில் அது பற்றி அறிவிப்பேன் என்றும் ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top