Shoreline

மன்னர் காலத்திலிருந்து மக்களாட்சி வந்தும் மாறாமல் இருக்கும் அற்புதமான ஒன்றை பற்றி உங்களுக்கு தெரியுமா? இது அன்றாடம் உங்கள் கூடவே இருக்கும் ஒன்றுதான் என்றால் நம்ப முடியுமா ?

Apr 16 2021 09:47:00 AM

உலக அளவில் பட்டுப்புடைவைகள் தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கலாச்சாரம் மற்றும் நமது நாட்டின் பாரம்பரிய உடைகளில் பட்டுபுடவைக்கு என்று தனி இடம் உள்ளது. இன்று நவீன உலகத்தில் ஏகப்பட்ட கவர்ச்சியான மாடர்ன் உடைகள் வந்திருந்தாலும் இந்திய பெண்களையும் பட்டுபுடவைகளையும் எப்போதும் பிரிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சந்தேரி என்னும் ஊரில் தயாரிக்கப்படும் சந்தேரி பட்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல்  கைத்தறியில் நெய்யப்பட்டு வருகிறது. முகலாயர் காலத்தில் மிகப்பிரபலம் அடைந்த இந்த பட்டு காலப்போக்கில் வீழ்ச்சியை கண்டது. அதன் பின் சில தன்னார்வ அமைப்புகள் மூலம் சந்தேரி பட்டு மீட்டெடுக்கப்பட்டு மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.

silk-saree

ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் கட்டாக் நகரங்களுக்கு இடையில் மணியாபந்தா என்ற நகரம் ஒன்று உள்ளது. இங்கு பழங்காலத்தில் இருந்தே ஒற்றை இகாட் என்ற முறையில் பட்டுப்புடைவைகள் தயாரிக்கப்படுகிறது. மற்ற பட்டு ரகங்களில் இருந்து வேறுபட்டு காணப்படும் இது டஸ்லர் பட்டுகளுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய பட்டு என்றால் அது காஞ்சிபுரம் பட்டு தான். இந்த பட்டுப்புடைவைகள் தான் தமிழர்களின் திருமண நிகழ்வில் தவறாமல் இடம்பெறும். இங்கு தயாரிக்கப்படும் பட்டுப்புடைகளின் தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தூய மல்பரி பட்டு நூலில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

silk-saree

உலகப்புகழ் பெற்ற பனாரஸ் பட்டு வாரணாசியில் தயாரிக்கப்படுகிறது. கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் இந்த பட்டு 2000 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஒரு பட்டை நெய்வதற்கு 6 மாதங்கள் வரை ஆகும் என்பதால் இது மிகவும் அரிதான பட்டாக கருதப்படுகிறது. இந்த பட்டிற்கு இந்திய அரசின் முத்திரை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மகாராஷ்டிராவில் உள்ள பைதானி நகரத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளும் இந்திய பாரம்பரியத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அந்தக்காலத்திலேயே தங்க நூல்களை கொண்டு இந்தப்பட்டு தயாரிக்கப்பட்டதுகாலப்போக்கில் சாமானியர்களுக்கு கிடைக்கும் வகையில் வெள்ளி ஜரிகை நூலைக்கொண்டு பைத்தானி பட்டு புடவைகள் தயாரிக்கப்பட்டன.