அதிகரிக்கும் சிலிகோஸிஸ்!!
  • 08:23AM Oct 09,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 08:23AM Oct 09,2017 Chennai, Tamil Nadu 600003, India

ராஜஸ்தானில் உள்ள பூதப்புர என்ற கிராமத்தில் வசிப்பவர் ஊர்மிளா யாதவ்.,19 வயதான இவர் சிலிகோஸிஸ் என்னும் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.! இது காசநோய் விடச் சிறிது கொடுமையானது.

_98149064_silicosis1.png

சுரங்க வேலைகள் செய்பவர்களுக்கு அதிகமான அளவில் தாக்கப்படும் நோய்களில் சிலிகோஸிஸ் ஒன்று..பலர் இந்த நோயைப் பற்றி அறியாமலே இறந்துள்ளனர்.! மிகக்குறைந்த வயதில் இந்த நோயினால் தாக்கப்பட்டவர் ஊர்மிளா தான்.,தன் வீட்டுச் சுமைகளை கருத்தில் கொண்டு ஊர்மிளா சுரங்க வேலைகளுக்குச் செல்ல ஆரமித்துள்ளார்.17 வயதின் பொழுது மூச்சுத்திணறல்,இரும்பல் அதிகரித்ததால்,பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.,அப்பொழுது மருத்துவர்கள் இது காசநோய் ஆக இருக்கலாம் எனக் கருதி ஆறு மாதங்கள் சிகிச்சை கொடுத்துவந்துள்ளனர்..ஆனால் எந்தப் பயனும் இல்லை.,அதற்குப் பின்  பரிசோதித்த பிறகே இவர் சிலிகோஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.! இவர் பாதிக்கப்பட்டதின் பிறகே அந்தக் கிராம மக்கள் இந்த நோயைப் பற்றி தெரிந்து கொண்டனர்.! இப்பொழுது சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட ஊர்மிளாவின்  உடல் நலம் சிறிது மேம்பட்டுள்ளது,ஆனால் முழுமையாகக் குணம் அடையவில்லை.,தன் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு மற்ற சிறுதொழில்களை செய்து வருகிறார்.!

Coal_Mine.jpg

ராஜஸ்தானில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலைகள் இல்லாததால்,இந்தச் சுரங்க வேலைகளுக்குச் சென்று விடுகின்றனர்.,ராஜஸ்தானில் தான் இந்தச் சுரங்க வேலைகளுக்கான குத்தகை இந்தியாவில் அதிகம் விடப்படுகிறது..சுரங்க வேலைகள் செய்பவர்களுக்கு வரும் பரவலான நோய் இது.

 

இந்த சுரங்கவேலைகளிலால் ஏற்படும் புகைகளை சுவாசிப்பதனால் ஏற்படும் நோய் தான் இந்த சிலிகோஸிஸ்.இதுவரை இந்த சிலிகோஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 8441 பேர்,ஆனால் அதைவிட அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.இதில் சோகம் என்னவென்றால் இந்த நோயிற்கு நிரந்தர தீர்வு கிடையாது.!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top