Misc

மூஞ்சிய அழகு படுத்தலாம் என்று நினைத்தால் இப்போ அலங்கோலம் ஆகி விட்டதே! உங்களால எனக்கு வேலை போச்சே இதுக்கு என்ன பதில் சொல்லப்போறிங்க?

Jun 18 2021 07:00:00 PM

மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வரும் பலருக்கும் நேர்காணல் எவ்வளவு முக்கியமானது என்று தெரியும். நேர்காணலின்போது முகத்தை தெளிவாகவும் அழகாகவும் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக பெண்களின் முகம் சரியாய் இருப்பது மிகவும் அவசியமாகும். முகத்தோற்றத்தை வைத்தே நேர்காணலில் உங்களுடைய குணாதிசயங்களை கணித்து விடுவர்.

shrek-like-face girl-face-mask-goes-green

இவ்வளவு முக்கியமான விஷயங்கள் நிறைந்துள்ள நேர்காணலுக்கு கடைசி நேரத்தில் செல்ல முடியாத சோகமான அனுபவத்தை கோடா என்ற பெண் வீடியோவாக பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். க்ரீம், லோஷன், பேஸ் மாஸ்க் என்று பல அழகு சாதன பொருட்களையும் சமூக வலைதளங்களில் விளம்பரம் மூலம் விற்பனை செய்வது தற்போது அதிகரித்து வருகிறது.

shrek-like-face girl-face-mask-goes-green

கோடா என்ற அந்தப்பெண் ஒரு விளம்பரத்தை பார்த்து பேஸ் மாஸ்க் வாங்கியிருக்கிறார். நேர்காணலுக்கு செல்வதற்கு முன் இதை முகத்தில் அப்ளை செய்துகொண்டு அழகான தோற்றத்துடன் செல்லலாம் என்று எண்ணி அதை தனது முகத்தில் பயன்படுத்தியுள்ளார். உங்களுடைய கிரீமுடன் கலந்து இதை பயன்படுத்துங்கள் என்று விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. அவரும் அதன்போலவே செய்து முகத்தில் தடவியுள்ளார்.

shrek-like-face girl-face-mask-goes-green

ஆனால் பச்சை நிறத்தில் இருந்த அந்த கலவை தண்ணீரால் கழுவிய பின்னரும் அவரது முகத்தில் இருந்து நீங்காததால் அ திர்ச்சி அடைந்தார் கோடா. சோப்பு, பேஸ் வாஷ் எல்லாவற்றையும் பயன்படுத்தி பலமுறை முகத்தை கழுவியும் பச்சை நிறம் அவரது முகத்தில் இருந்து குறையவில்லை. பாங்க் ஆப் அமெரிக்காவில் நேர்காணலுக்கு செல்லவிருந்த அவர் முந்தைய நாள் இதை தனது முகத்தில் பயன்படுத்தியதால் நேர்காணலுக்கு செல்லமுடியவில்லை.

shrek-like-face girl-face-mask-goes-green

இந்த சம்பவத்தை டிக்டாக்கில் பதிவிட்டு வேதனை தெரிவித்துள்ளார் அவர். டிக்டாக் யூசர்களிடம் இந்த பச்சை நிறத்தை முகத்தில் இருந்து நீக்குவதற்கு என்ன வழி என்று பலரிடமும் யோசனைகளை கேட்டு வருகிறார் அவர். நெட்டிசன்களில் சிலர் அவரது முகம் தி மைட்டி புஷ் தொடரில் வரும் பச்சை மனிதனான ஷ்ரெக் போல உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். விளம்பரத்தை பார்த்து ஏமாந்து போகக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு உதாரணாமாக அமைந்துள்ளது.