Rainforest

இவருக்குள் இப்படி ஒரு கனிந்த உள்ளம் இருக்கும் என்று நினைத்திருப்பீர்களா? தனது பெருந்தன்மையால் அனைவரையும் திகைப்படைய வைத்த மெகா நடிகர்

Apr 17 2021 08:36:00 PM

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன்னுடைய பெருந்தன்மையான செயல் மூலம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ட்டியில் ஷாருக்கானின் சட்டையை பிடித்து மூக்கை உடைக்க முயன்று மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். சக நடிகருடன் இப்படியா நடந்து கொள்வது என அவரை அனைவரும் திட்டி தீர்த்தனர். ஆனால் இப்போது கல்லுக்குள் ஈரம் என்று சொல்வது போல மிகவும் கனிவான மனிதராக மாறிவிட்டார். அவருடைய பக்குவமான செயல்கள் இப்போது அவரை ஒரு மிகச்சிறந்த மனிதராக அடையாளம் காட்டி வருகிறது.

sharukh-salman

கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஷாருக்கான் ஒரு மெகா ஹிட்டை கொடுக்கும் நோக்கத்துடன் பதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் டிம்பிள் கபாடியா, ஜான் ஆபிரஹாம் போன்றவர்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். ஆதித்யா சோப்ராவின் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

sharukh-salman

இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார். 10 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஷாரூக்குடன் இணைந்து சல்மான் நடித்திருக்கிறார். இந்த பத்து நாட்களுக்கே அவருக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க நினைத்தார் ஆதித்யா சோப்ரா. ஆனால் அதை வாங்க மறுத்து விட்டார் சல்மான். ஷாருக் என்னுடைய சகோதரரை போன்றவர். அவருடன் நடிப்பது எனக்கு பெரு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் என்று கூறி சம்பளம் நிச்சயம் வாங்க மாட்டேன் என விடாப்பிடியாக கூறிவிட்டார். அவருடைய இந்த பெருந்தன்மையான குணம் பாலிவுட்டில் இருக்கும் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி விட்டது. ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜீரோ படத்திலும் ஒரு சிறிய காட்சியில் தோன்றியிருந்தார் சல்மான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.