Lushgreen

கிங் ஆஃப் ரொமான்ஸ் உடன் இணைந்து பணியாற்ற யாருக்குத்தான் ஆசை இருக்காது? இவருடைய நட்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை!

Jul 31 2021 12:00:00 PM

பொழுதுபோக்கு துறையின் மெகாஸ்டார் மற்றும் உலகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர்களை பெற்றிருக்கும் ஷாருக் கான் சமீபத்தில் சினிமாவில் 3 தசாப்தங்களை நிறைவு செய்தார். இந்த நீண்ட காலகட்டத்தில் 'கிங் ஆஃப் ரொமான்ஸ்' என்று செல்லமாக அழைக்கப்படும் ஷாருக் அவரது சக நடிகர்களுடன் ஒரு சிறந்த பிணைப்பை வளர்த்துக் கொண்டார். அவர்களுடனான அவரது உறவு திரையை தாண்டியும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. பாலிவுட்டின் பல நடிகைகளும் எஸ்.ஆர்.கே உடன் ஒரு சிறந்த உறவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு இடையேயான உணர்ச்சி பிணைப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

sharuk-khan on-screen-pairs

பாலிவுட்டின் மிகச் சிறந்த திரை ஜோடிகளில் ஒன்றாக கருதப்படும் கஜோல் மற்றும் ஷாருக் கான் திரைக்கு வெளியே சிறந்த நண்பர்கள். இருவரும் குச் குச் ஹோடா ஹை, தில்வாலே துல்ஹானியா ஜெயங்கே மற்றும் பல பிளாக்பஸ்டர்களில் இணைந்து பணியாற்றினர்.

sharuk-khan on-screen-pairs

ஜூஹி சாவ்லாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றிய ஷாருக் கான் அவருடன் ஒரு சிறந்த பிணைப்பை உருவாக்கியுள்ளார். ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இவர்கள் இருவரும் சொந்தக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

sharuk-khan on-screen-pairs

ஃபராவும் எஸ்.ஆர்.கேவும் மிகவும் பழைய நண்பர்கள். அவர்கள் பெரும்பாலும் நேர்காணல்களின் போது ஒருவருக்கொருவரை பற்றிய சிறப்பு விஷயங்களைச் சொல்வார்கள். நடன இயக்குனர் ஃபரா ​​மெயின் ஹூன் நா என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறியபோது அதில் ஷாருக் தான் நாயகனாக நடித்துக்கொடுத்தார். மேலும் ஓம் சாந்தி ஓம் மற்றும் ஹாப்பி நியூ இயர் படத்திலும் மீண்டும் இந்த கூட்டணி இணைந்தது.

sharuk-khan on-screen-pairs

ஓம் சாந்தி ஓமில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே பாலிவுட்டில் அறிமுகமானார். அங்கிருந்து இருவரும் ஒரு பெரிய பிணைப்பை ஆஃப்ஸ்கிரீனில் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த ஜோடி பின்னர் சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றியது. தற்போது ஷாரூக்குடன் பதான் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் தீபிகா படுகோனே.

sharuk-khan on-screen-pairs

ஷாருக் மற்றும் ராணி முகர்ஜி இடையிலான பிணைப்பு குச் குச் ஹோடா ஹை படத்தில் தொடங்கி நீண்ட காலமாக இருந்து வருகிறது. எஸ்.ஆர்.கே.வின் ரப் நே பனா டி ஜோடி படத்தின் மூலம் அனுஷ்கா ஷர்மா பெரிய திரையில் அறிமுகமானார். நிஜ வாழ்க்கையில் அவர்கள் சிறந்த நட்பைப் பகிர்ந்துகொள்வதை அனைவராலும் எளிதில் காண முடிகிறது.