Rainforest

தந்தையை போலவே இந்த சமாச்சாரத்தில் மகனும் வெளுத்து வாங்குவாரா? எத்தனை தலைமுறை வந்தாலும் எல்லாத்துக்கும் இது பொதுவான ஒன்றாயிற்றே!

Apr 19 2021 10:06:00 AM

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் சாந்தனு பாக்யராஜ். நடிகர் மற்றும் இயக்குனரான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தம்பதிகளின் மகனாவார். 1998ம் ஆண்டு வெளிவந்த வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு 2008ம் ஆண்டில் சக்கரக்கட்டி திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

shanthanu-latest

இந்த படத்தில் இடம்பெற்ற டாக்ஸி பாடல் பயங்கர ஹிட் அடித்தது. தொடர்ந்து கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம் போன்ற பல படங்களில் நடித்தாலும் இன்னமும் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதிக்க முடியாமல் தவித்து வருகிறார். மிகச்சிறப்பாக நடனம் ஆடுவதில் வல்லவரான சாந்தனுவுக்கு அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்த இன்னமும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. விஜயுடன் நடித்த மாஸ்டர் படத்தில் அவருடைய கதாபாத்திரம் ஓரளவுக்கு ரசிக்க வைத்தாலும் படத்தில் அவருக்கு அதிகம் காட்சிகள் இல்லை. நெட்ப்ளிக்ஸில் வெளியான ஆந்தாலஜி திரைப்படமான பாவக் கதைகள் படத்தில் அவருடைய நடிப்பு பேசும்படியாக அமைந்தது.

shanthanu-latest

தற்போது அவருடைய அடுத்த படமான முருங்கைக்காய் சிப்ஸ் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். வழக்கத்தை விட இந்த படத்திற்காக சற்று கூடுதல் கவர்ச்சியை வழங்கியிருக்கிறார் அதுல்யா. படத்தின் பெயரிலேயே என்ன சமாச்சாரம் கூற வருகிறோம் என்பதை தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலெர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முருங்கைக்காய் விஷயத்தை தனது படத்தில் கச்சிதமாக பயன்படுத்தி ஏற்கனவே பாக்யராஜ் வெற்றி கண்டுள்ளார். அவரது மகனான சாந்தனுவுக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் ஒரு திருப்புமுனை கொடுக்குமா என்பதை படம் வெளியாகும் சமயத்தில் தான் தெரிந்து கொள்ள முடியும்.