உலகத்தின் 7 அதிசயத்தையும் ஒன்றாகக் கொண்டுவந்த டெல்லி கார்ப்பரேஷன்!
  • 11:44AM Feb 07,2019 Delhi
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 11:44AM Feb 07,2019 Delhi

இந்தியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றனர். அண்மையில் உலகையே வியக்கவைக்கும் வகையில் 3000 கோடி செலவில் உலகின் மிக உயரமான சிலை குஜராத்தில் நிறுவப்பட்டது, அதனைத் தொடர்ந்து தற்போது டெல்லி நகரத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் உலகின் 7 அதிசயங்களையும் ஒன்றாகக் கொண்ட பார்க்கை டெல்லி கார்ப்பரேஷன் அமைத்து வருகிறது. சுமார் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பார்க்கில் ஸ்கிராப் ஆட்டோமொபைல் பாகங்களைக் கொண்டு தாஜ்மஹால், ரியோ டி ஜெனிரோவின் கிறிஸ்து சிலை, ஈஃபில் டவர், கொலோசியம், பிசா சாய்ந்த கோபுரம் மற்றும் கிசா பிரமீடு போன்றவை வடிவமைத்துள்ளனர்.

இந்த உலகின் 7 அதிசய வடிவமைப்புகளை இந்த பார்க்கில் பொறுத்திவிட்ட நிலையில் அதற்கான அலங்கார பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பழைய சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு பார்வைக்கான சோதனைகள் நடந்து முடிந்துவிட்டது. தற்போது இந்த இடங்களுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும் அடுத்த வாரம் பொதுமக்களின் பார்வைக்கு இந்த பார்க் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த பார்க் டெல்லி மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பலரின் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top