கருவுற்ற தனது மனைவிக்கு சென்ட்ராயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..? மகிழ்ச்சியில் உடனே கிளம்பி வர சொன்ன நடிகை ஸ்னேகா..
  • 17:13PM Dec 06,2018 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 17:13PM Dec 06,2018 Chennai

பிக்பாஸ் ஷோவை பொறுத்த வரை, மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் என்றால் அது சென்ராயன் தான் .அவர் வெளியே வந்த நாள் முதல் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.முதன் முதலில் சிம்பு சென்ராயனை வீட்டிற்கு அழைத்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்,மேலும் நல்ல படங்களை சரியாக தேர்வு செய்து நடிக்க வேண்டுமென அறிவுரையை கூறியுள்ளார். சென்ராயன் தனக்கு குழந்தை இல்லை, ஆசிரமத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க போகிறேன் என கூறியதும் கமல் உங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என சொன்ன நேரமோ என்னமோ பிக்பாஸ் முடிவதற்குள் சென்றாயனுக்கு நல்ல செய்தி வந்தாச்சு.தனது மனைவி கர்ப்பமான செய்தியை கேட்டதும் சென்ராயன் அடைந்த மகிழ்ச்சி அளவற்றது.

தற்போது மனைவி கயல்விழியின் நெடுநாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார் சென்ராயன்.கயல்விழி, நடிகை சினேகாவின் தீவிர ரசிகை என்பதால், கயல்விழிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சினேகாவின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.சென்றாயன் குடும்பம் சினேகாவின் குடும்பத்துடன் நெருங்கி பழகியது மட்டுமின்றி புகைப்படங்களும் எடுத்து கொண்டனர்.

Top