Misc

சீமை கருவேல மரங்கள் இந்தியாவில் எப்படி வளர ஆரம்பித்தன? சீமை கருவேல மரங்களின் வரலாறு என்ன என்று தெரியுமா?

Jun 08 2021 07:56:00 PM

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் சீமை கருவேல மரங்கள் நம் நாட்டில் இருந்ததாக எந்த வரலாறும் இல்லை. இந்தியாவிற்கு பிரிட்டிஷ்க்காரர்கள் சுதந்திரம் வழங்கிய போது இந்த நாடு எப்போதும் செழிப்பாக இருக்கக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் சீமை கருவேல விதையை விமானங்களின் மூலம் இந்தியா முழுவதும் தூவி விட்டதாக ஒரு கதை கேள்விப்பட்டிருப்போம். இந்த கதையில் துளி கூட உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

seemai karuvela marangal

1950 ஆம் ஆண்டிற்கு பிறகு சரியான மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் இந்தியா முழுவதும் பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடியது. விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு நீர் இல்லாமல் திண்டாடினார்கள். அப்போது மக்கள் அடுப்பு எரிக்க குச்சி, விறகு கூட இல்லாமல் அ வதிப் பட்டனர். அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு சீமை கருவேல மரங்களின் விதைகளை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்து விமானங்கள் மூலம் இந்தியா முழுவதும் தூவி விட்டதாக சொல்கிறார்கள்.

seemai karuvela marangal

ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு இந்த சீமை கருவேல மரங்கள் மிகவும் உதவிகரமாக இருந்தன. தங்கள் விவசாய நிலங்களை சுற்றி வேலி போல இந்த சீமை கருவெளி மரங்கள் இருந்துவந்தன. அதே போல இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் குச்சிகளை மக்கள் அடுப்பு எரிக்க பயன்படுத்தினார்கள். இந்த மரத்தின் காய் ஆடுகளுக்கு உணவாக பயன்பட்டது.

seemai karuvela marangal

விவசாயத்திற்கு நீர் இல்லாத நேரங்களில் கூட இந்த மரத்தை மக்கள் வெட்டி விறகுக்காக பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இப்போது தான் தெரிகிறது இந்த மரங்கள் நீரே இல்லை என்றாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி எவ்வளவு வருடங்கள் வரை வேண்டுமானாலும் உ யிருடன் இருக்குமென்று. இப்போதெல்லாம் நிலத்தடி நீர் வேண்டி ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் போது பல நூறு அடிகள் தாண்டி நீர் வருவதற்கு இந்த சீமை கருவேல மரங்கள் தான் காரணம். அதேபோல என்னதான் வானம் மேக மூட்டத்துடன் மழை பெய்வதற்கு தோதுவான நிலையில் இருந்தாலும் மழை பெய்யாமல் போவதற்கும் இந்த மரங்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. முடிந்தவரை நம் வீடுகளுக்கு அருகில் இருக்கும் சீமை கருவேல மரங்களை வெட்டி நம் நிலத்தடி நீர் வளத்தைக் பாதுகாப்போம்.

seemai karuvela marangal