பிக் பாஸ் ஜுலி அனைவராலும் வெறுக்கப்பட்ட இரகசியம் என்ன தெரியுமா???
  • 09:35AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:35AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India

சமீபகாலமாக அனைவராலும் கவனிக்கப்பட்ட நிகழ்ச்சி “பிக் பாஸ்”.  அதில் ஓவியாவை பிடிக்காதவர்கள் கூட வெறுத்தது ஒருத்தியைத்தான்.  அது ஜூலி. அவ்வளவு மக்களும் ஒன்று சேர்ந்து ஜூலியை வெறுக்கக் காரணம் என்ன???  எதனால் அனைத்துத் தரப்பு மக்களாலும் அவளை சகித்துக் கொள்ள முடியாமல் போனது??? 

பொதுவாக, நாம் அனைவருமே வாழ்க்கையில் ஒருமுறையேனும் ஏமாற்றப்பட்டிருப்போம்.  மனம் என்பது ஒரு மிக வித்தியாசமான ஒரு இயந்திரம்.  நாமே மறந்துவிட்டோம் என நம்பும் நிறைய விஷயங்களை அது நினைவில் வைத்திருக்கும். Memory Clusters-ஆக பதிந்திருக்கும் அவை, தக்க நினைவூட்டல் ஏற்படும் வேளையில் சட்டென்று வெளியே வரும்.  உ.தா. இரண்டு வருடங்களாக நாம் மாம்பழமே சாப்பிடவில்லை என வைத்துக் கொள்வோம். நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் பேச்சு மாம்பழத்தைப் பற்றிப் போனால், நம்மை அறியாமல் மனம் அந்த Memory Cluster-ஐ தேடி எடுத்து, அதன் சுவை மனம் போன்றவற்றை ஞாபகப்படுத்தும்,

அதே போல், ஒரு தொழில் நட்டத்தையோ, காதல் தோல்வியோ அல்லது நம்பிக்கை துரோகத்தையோ அனுபவித்த அனைவரும், (ஏறக்குறைய அனைவரும்!!!) அந்த நபரின் ஏதோ ஒரு குணாதிசயத்தை ஜூலியிடம் பார்க்கின்றனர். ஜூலியின் செய்கைகள் திரும்பத் திரும்ப அந்தக் குணாதிசயத்தை வலியுறுத்த, அந்த நபரும் ஜூலியும் வேறுவிதமான இயல்புகளைக் கொண்டிருந்தாலும், நம் மனம் இருவரையும் ஒரே தட்டில்தான் வைத்துப் பார்க்கும். தன்னையறியாமல் தன்னை ஓவியாவாகவும், அந்த நபரையும் ஜூலியாகவும் எண்ணி, அவர் மேலுள்ள கோபத்தினை ஜூலியின் மீதான கோபமாக மாற்றிக் கொள்கிறது.

இப்பொழுது புரிகிறதா, ஜூலியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு ஏனென்று?!?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top