சவூதி பெண்ணுக்காக ஆஸ்திரேலியாவில் SecretSisterHood நிர்வாண போராட்டம்!
  • 18:06PM Jan 11,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 18:06PM Jan 11,2019 Chennai

சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ரஹப் முகமது அல்கியூனன் என்ற இளம்பெண். இவரது பெற்றோர், ரஹப் உடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரை அறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். பெற்றோரின் கொடுமையை தாங்கமுடியாத ரஹப், நாட்டை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் பெற முயற்சித்துள்ளார். விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத ரஹப் குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டர். இவரது கெட்ட நேரம் பாங்காக் விமானநிலையத்தில் சிக்கிக்கொண்டார். இவரை மீண்டும் சவுதிஅரேபியாவுக்கே திருப்பி அனுப்பிவைக்க தாய்லாந்து அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

ஆனால் ரஹப் இதற்கு மறுப்பு தெரிவித்தார். அங்கிருந்து எப்படியாவது ஆஸ்திரேலியா செல்லவேண்டும் என்று முடிவெடுத்த ரஹப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டு வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். அந்த வீடியோ சர்வதேச அளவில் பலரின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் SecretSisterHood என்ற பெண்கள் அமைப்பினர் இந்தப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து சிட்னியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தாய்லாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரிஸ் பேனே அந்நாட்டு வெளியுறவு மந்திரியைச் சந்தித்து ரஹப்வுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் வழங்குவது குறித்து பேசியுள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top