பாடங்களைப் படிக்கும் இரகசியம்…
  • 10:13AM Sep 29,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:13AM Sep 29,2017 Chennai, Tamil Nadu 600003, India

எவ்வளவு படிச்சாலும் மண்டையில ஏறவே மாட்டேங்குது, டீச்சர் சொல்றப்போ புரிஞ்ச மாதிரி இருக்கு, ஆனா வீட்டுக்கு வந்த பிறகு எதுமே நினைவுக்கு வரலை என்று புலம்புபவர்களா??? சுலபமாக மனப்பாடம் செய்ய சில வழிகள் இதோ…. பாடங்கள் பெரும்பாலும் கவனிப்பவரின் தன்னம்பிக்கையைப் பொறுத்துதான் மனதில் நிலை பெறும்.  அன்று நடக்கப் போகும் பாடத்தினை முந்தைய நாளே படியுங்கள்.  இது உங்களுக்குள் எனக்குத் தெரியும் என்ற எண்ணத்தை உருவாக்க உதவுவதோடு, சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும்.  மறுநாள் கேட்க முடியுமோ, முடியாதோ,,, அப்படித் தெரிந்த விஷயத்தை மேலும் ஒருதடவை பிறர் சொல்லக் கேட்பது உங்கள் மனதில் அவற்றை ஆழமாகப் பதிய வைக்கும்.

இரண்டாவது, பிராக்டிகலாக உங்களால் செய்ய முடிந்ததைச் செய்து பாருங்கள்.  முடியாதவற்றை இணையத்தில் பாருங்கள்.  அப்படி ஒலி, ஒளிக் காட்சியாகப் பதியும் எந்தவொரு விஷயமும் லேசில் மறக்காது. 

மூன்றாவது, விளையாட்டாகக் கஷ்டமாக இருக்கும் பாடத்தினை, “இது ஏன் இப்படி நடக்கனும்?”, “இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?” போன்ற விதத்தில் நண்பர்களுடன் விவாதியுங்கள்.  மனதில் தோன்றுவதையெல்லாம் கேள்வியாகக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.  காரணங்கள் தெரியத் தெரிய பாடத்தின் மீதான புரிதல் அதிகமாகிவிடும்.  புரிந்த எதுவும் என்றைக்கும் மறக்கவே மறக்காது.

நான்காவது, ரிலேட்டிவிட்டி. பாடத்திட்டத்தை ஒரு கோர்வையாக கதை போல படியுங்கள்.  அல்லது உங்களுக்கு சுவாரஸ்யமான ஏதாவது ஒன்றோடு தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள்.  உங்களுக்குச் சுவாரஸ்யமானவை உங்கள் மனதில் எவ்வளவு ஆழத்தில் இருக்குமோ, அவ்வளவு ஆழத்தில் அந்த விஷயமும் புதைந்து விடும்.

ஐந்தாவது, சோர்வாகவோ படிக்கும் மூட் இல்லாவிட்டாலோ போராடாதீர்கள்.  இரண்டு நாட்கள் போராடினால், படிக்கத் துவங்கும் போது அன்று என்ன செய்தீர்களோ, அவையே மீண்டும் வெளியே வரும்.  அதாவது, சோர்வில் இருக்கும் போது படிக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நமது பயாலஜிக்கல் க்ளாக் உடலின் அதிகபட்ச செயல்பாட்டினால், படிப்பைச் சோர்வுடன் இணைத்துப் பார்க்க ஆரம்பித்து விடும்.  டீச்சர் பாடம் நடத்தத் துவங்கியதுமே தூங்கிவிடும் பல பேர் இப்படி Forced activity-யால் பாதிக்கப்பட்டவராக இருப்பார்.  பரிட்சை நேரத்தில் பயத்தில் அதிகாலை மூளை ப்ரெஷ்ஷாக இருக்கும் போது முதல் நாள் படித்திருப்பீர்கள்.  அதுவே பரிட்சை முடியும் வரை தொடரும், காரணம் இந்த பயாலஜிக்கல் க்ளாக்கின் பதிவு.

ஆறாவது, பரிட்சை ஹால் வரைக்கும் புத்தகங்களைக் கொண்டு போகாதீர்கள்… மூளைக்கு அதிக வேலை, சோர்வை மட்டுமே அளிக்கும்.  சில நேரங்களில் writer’s block (அதாங்க, பேப்பரை வாங்கியிருப்போம், ஆனா பிள்ளையார் சுழி கூடப் போடத் தோணாது இல்லையா…) ஏற்படக் கூடும்.  அது ஒரு தற்காலிக பாதிப்பு, மூளைச் சோர்வால் ஏற்படுவது. ஐந்து நிமிடங்களில் சரியாகிவிடும். ஆனால், பரிட்சை ஹாலில் எல்லாமே மறந்தது போன்ற இந்த நிலை கண்டிப்பாக பரிட்சைக்கு உதவாது.  மேலும், குறைவான tension-ல் தான் நம் மனம் முழுமையாக வேலை செய்யும். பரிட்சை ஹாலுக்கு வெளியே படித்தவர்களை விட, ஹாயாக இருந்தவர்கள் அதிக மார்க் வாங்குபவர்களாக இருக்கிறார்கள்.  அப்புறம் முக்கியமான விஷயம், இந்தக் question படிச்சியா, இது ரொம்ப important என்று பழைய question paper எல்லாம் கரைத்துக் குடித்துவிட்டு வந்தது போல் யாரேனும் நண்பர்கள் இருந்தால் சற்று விலகியே இருங்கள்…

படிப்பு என்பது புரிந்து படிப்பது.  உங்களுடைய புரிதலே நாளை உங்களைச் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வைக்கும்.  படிப்பைச் சுமையாக்காமல், மேலே சொன்னது போலப் படித்து வந்தால், நாள் போகப் போக உங்களுக்கே அது பிடித்தமான ஒன்றாக மாறி விடும்.  அப்புறம் என்ன, நினைத்த நேரத்துல நினைத்த மார்க் வாங்க உங்களாலயும் முடியும்…

 

    

Top