சிதம்பர ரகசியம்...
  • 09:46AM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 09:46AM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

 

சிதம்பர ரகசியம் எனும் ஒரு சொல் அனைவரின் மனதிலும் ஆழ்ந்து பதியப்பட்டுள்ளது.இந்த ரகசியம் என்ன என்பதற்கு அவரவரின் பார்வையில் ஒரு பதில் இருக்கும்.ஆனால் இதன் உண்மை இன்று வரை புரியாத புதிராகவே விளங்குகிறது.சிதம்பரம் நடராஜர் கோயிலிற்கு பல புராண வலராறுகளும்,அறிவியல் சான்றுகளும் கிடைத்தவண்ணம் உள்ளது.

நம்முடைய புராணங்களின் படி தை மதம் மற்றும் குரு பூசம் ஆகிய தினங்களில் சிவபெருமான் தன்னுடைய 3000 பூதகணங்களுடன் இந்தத் திருவிடத்தில் ஆனந்த தாண்டவம் ஆடுவதற்கு வருவார்.அப்படி ஒருமுறை வந்த பூத கணங்கள் அனைவரும் திரும்பி விட்டனர்,ஆனால் ஒரே ஒரு பூதகணம் மட்டும் திரும்பவில்லையாம் அது யார் என்று அனைவரும் தேடிக்கொண்டிருந்தனர்.அப்போது ஒரு அசரீரி ஒன்று கேட்டதாம் காணாமல் போனது தான்"நடராஜர் " என்று கூறி மறைந்ததாம்.அந்த இடத்தில் தான் இந்தத் திருத்தலம் இன்று அமைந்துள்ளது.

இன்று வரை இந்தக் கோவில் கட்டப்பட்ட ஆண்டு என்ன என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.சைவ சமயத்தின் படி மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்படுகிறது.எனினும் ஆராய்ச்சியாளர்கள் இது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு சிவபெருமான் பக்தர்களுக்கு மூன்று உருவங்களாகக் காட்சியளிக்கிறார்.பல புராணங்கள் நிறைந்த இந்தக் கோவிலின் அறிவியல் சிறப்புக்கள் பல இருக்கிறது.இந்தக் கோவிலின் அமைப்பு மிகவும் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது.பூமியின் கந்தகதிர்வீச்சின் மையப்பகுதியில் அமைந்திருப்பது இதன் சிறப்பு.உலகம் இயங்குவதற்கு COSMOS RAY எனப்படும் பிராணத்துகள் தான் கரணம் என்று அனைவரும் அறிந்ததே ஆனால் அந்தத் துகள்கள் பூமியை வந்தடைந்து பூமியை விட்டு  வெளியே செல்லும் செல்லும் வழியாக இருக்கும் இடத்தில் இந்தக் கோவில் அமைந்திருப்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

உலகின் தலைசிறந்த ஆராய்ச்சிக்கூடமான CERN எனும் இடத்தின் நுழைவாயிலில் நடராஜர் சிலர் அமைந்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் உள்ளது.இதற்காக அவர்கள் கூறும் காரணம் மேலும் வியப்படையும் வகையில் உள்ளது.நம்முடைய அறிவிற்கும் அப்பாற்பட்ட பல உண்மைகள் நடராஜர் சிலையில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.சிலையில் அமைந்துள்ள நடராஜரின் உருவம் இந்த ப்ரபஞ்சட்ஜின் அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.அதைச் சுற்றி உள்ள வளையம் மற்றும் அதில் உள்ள தீ  இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது,இதனுள் அமைந்திருக்கும் அவரின் வடிவம் MILKYWAY GALAXY வழியே பிராணத்துகள்கள் செல்லும் திசையை குறிக்கிறது.

நடராஜர் சிலையில் அவருடைய இதயம் அமைந்திருக்கும் இடத்தில்தான் நம்முடைய சூரியக்குடும்பம்(SOLAR SYSTEM) அமைந்திருப்பதைக் குறிப்பிடுகிறது.நடராஜரின் இடுப்பில் சுற்றிக்கொண்டிருக்கும் நாகம் காலம் நிற்காமல் சுழன்றுவருவதை எடுத்துரைக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறியாத உண்மைகள் இன்னும் பல இதில் ஆச்சரியமூட்டும் செய்தி என்னவென்றால் பிக் பேங் தியரி(BIG BANG THEORY) என்று இன்று நிரூபிக்கப்பட்ட ஒரு கோட்பாட்டை பலஆயிரம் ஆண்டுகள் முன்பே கணித்து அதைக் கலைநயமாக்கி பூஜித்து வருகிறோம்.சிதம்பரம் ரகசியம் போல் இன்னும் பல புரியாத விந்தைகளை நடத்திவிட்டு ஆனந்தமாகத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார் தில்லை நடராஜர். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top