#Peacock: மயிலுக்கு கூட 'லவ்' பீல் வருமா? தோகையை விரித்து ஆடுவதன் அறிவியல் காரணம் - தெரிஞ்சா வியந்து போவீங்க!
  • 10:01AM Aug 16,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:01AM Aug 16,2019 India

எதனால் மயில் ஆடுதுன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, முதல்ல மயில் பேமிலி பத்தி தெரிஞ்சுக்கலாம். ஆங்கிலத்தில் மயிலின் பொதுப்பெயர் Peafowl. ஆண் மயிலினை peacock என்று அழைக்கிறோம். பெண் மயிலினை peahen என்று அழைக்கிறோம். இந்திய மயிலின் அறிவியல் பெயர் Pavo Cristatus. ஆண் மயிலுக்குத் தமிழ் மொழியில், சேவல் என்ற பெயரும் உண்டு. 1963 ஆம் ஆண்டு மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது.

எப்படி சிங்கத்துல ஆண் சிங்கம் பிடறி முடியோட பார்க்க கம்பீரமா இருக்குமோ, அதே போல மயில் இனத்திலும் ஆண் மயில் தான் நீண்ட தோகையுடன் பார்க்க அழகாக இருக்கும். தோகை சிறிதாக இருப்பது பெண் மயில். என்னதான் தோகை அதிகமாக இருந்து, பார்க்க அழகாக இருந்தாலும், பெண் மயிலை கவர ஏதாவது செய்தாக வேண்டும்.(எல்லா இனத்துலையும் அப்படித்தான் போல) அதற்காக தொடங்குவது தான் தோகை விரிப்பு நடனம்.

ஆண் மயில் தோகையை விரித்து, ஆடும் அழகை பார்த்து பெண் மயில் சொக்கி விடுமாம். இதில் சிறந்த நடனத்தை வெளிப்படுத்தும் ஆண் மயிலை, பெண் மயில் துணையாக தேர்ந்தெடுக்கும். இணையை கர்வதை தாண்டி, மேலும் பல காரணத்துக்காக மயில் தோகையை விரித்து ஆடும். ஆண் மயிலுக்கு மேல் நோக்கி நீட்டிக்கொண்டிருக்கிற இறகுகள் சலசலவென்ற ஓசை எழுப்பும். அப்போது மயில் கூக்குரலும் எழுப்புகிறது. அது இனிமையாக இருக்காது என்றாலும், அதுதான் பெண் மயில் மீது ஆசை என்பதை அறிவிக்கிறது.

மழை வருவதற்கு முன்னர், குளிர்ந்த காற்று வீசும் போதும் ஆண் மயில் தோகையை விரித்து ஆடும். அப்படி இல்லாமல் சாதாரண நேரத்தில், தனியாக தோகை விரித்து ஆடினால், அது எதையாவது ஒன்றை அச்சுறுத்த அப்படி செய்கிறது என்று அர்த்தம். ஆண் மயில் தோகை விரித்து ஆடுவதை பார்த்து, சில நேரங்களில் பெண் மயிலும் ஆட முயற்சிக்கும். ஆனால் ஆண் மயில் அளவுக்கு வசீகரம் இருக்காது. ஆண் மயிலின் நடனம் தான் மயங்க செய்யும். | #Attract Wife: மனைவியை மயக்க வேண்டுமா.? ஒரே வார்த்தையில் வலையில் வீழ்த்தும் சமாச்சாரம்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top