#secret mudras: பத்து விரலில் அடங்கியிருக்கும் அச்சாணி, கைதட்டும் போதே கிளம்பும் நரம்புகளின் எழுச்சி ! ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள்?
  • 20:16PM May 25,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 20:16PM May 25,2019 Chennai

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் பல வழிமுறைகள் பின்னால் ஓடியிருப்போம்.சிலர் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருப்பார்கள், ஆரம்பித்த ஒரு சில நாட்களிலே மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தால் உடற்பயிற்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். உடனே இது ஒர்கவுட் ஆகல என்றவாறு, யோகா செய்ய ஆரம்பித்திருப்பார்கள்.அதுவும் சரிப்பட்டு வரவில்லை என தியானம் போன்றவற்றில் தாவியிருப்பார்கள்.

இன்னும் சில நாட்களில் அதையும் விடுத்து வேறு ஒன்றிற்கு போய்விடுவார்கள்.இப்படி பலவற்றை முயற்சி செய்தவர்கள் ஏன் ஒன்றை கூட சரியாக மெயின்டைன் செய்ய முடியல? என பார்க்கும் போது, அலுவலக பணி,வீட்டு சூழல், என்ன செய்து என்ன ஆகா போகிறது என்ற விரத்தி, சோம்பேறித்தனம், நேரமின்மை என பலவற்றின் காரணமாக சரியாக செய்ய முடியாமல் போகிறது..

எதற்கும் நேரமில்லதாவர்கள் காலையில் கைதட்டினால் போதும்,பல்வேறு மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமையும்.மனநலம் இருந்தால் போதும் உடல் நலம் அதுவாக மேம்படும்.உள்ளங்கையில் தான் உடலின் அத்தனை ஆதார புள்ளிகளும் உள்ளது,தினமும் காலை 10 முறை கைதட்டினால் போதுமானது என்கிறார்கள் இந்த கலையில் சிறப்பு பெற்ற வல்லுனர்கள். காமெடி சீன் பார்க்கும் போது கைதட்டுகிறோம்,கஷ்டப்பட்டு யாரும் சிரிப்பதில்லை..அந்த சீன் முடியும்வரை சுறுசுறுப்பாக இருக்கிறோம்.நரம்பு மண்டலம் வேகமாக இயக்குகிறது..இதனால் ரத்த ஓட்டமும் சீராகிறது..காரணம் இரு கைகளுக்கும் அழுத்தம் கொடுக்கிறோம்..

தினமும் அதிகாலை இந்த செயலை 10 முறை செய்யும் போது அந்த நாளே உற்சாகமாக அமையும்.மனத்தில் நேர்மறை எண்ணங்கள் உருவாக இது துவக்க புள்ளி போல..இதனை தொடர்ச்சியாக செய்யும் போது சிறுநீரகம் தொடர்பான தொல்லைகளுக்கும் இது தீர்வாக அமைவதாக தெரிவிக்கின்றனர்..

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top