Misc

இத வாங்குறதுக்கு பேசாம சின்னதா ஒரு வீட்டையே வாங்கி குடியேறிடலாம்! கொஞ்சமாவது மனசாட்சியோடு வியாபாரம் செய்யுங்க சார்!

Jun 09 2021 11:42:00 AM

பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டே போவதால் பல நிறுவனங்களும் தங்களது வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றியமைத்து வருகின்றன. குறிப்பாக மின்சார கார்களின் உற்பத்தி எல்லா நாடுகளிலுமே அதிகரித்து வருவதை காண முடிகிறது. கார்களுக்கு இணையாக ஒரு சில நிறுவனங்கள் இரு சக்கர வாகனங்களையும் தயாரித்து வருகின்றன. கார்களின் விலை அதிகம் என்பதால் பலரும் இரண்டு சக்கர வாகனமான பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.

scrambler-bike

நாம் வாங்கும் பொருள் நமது பட்ஜெட் விலையில் இருக்க வேண்டும் என்று தான் பெரும்பாலும் நடுத்தர மக்கள் யோசிப்பர். ஆனால் ட்ரையம்ப் நிறுவனத்தின் புதிய மாடல் பைக்கோ பட்ஜெட் விலையை விட பல மடங்கு அதிகமாக விற்பனைக்கு வந்துள்ளது. scrambler 1200 steve Mcqueen Edition 2021 என்ற புதிய மாடல் தான் அது.

scrambler-bike

பல்வேறு நவீன சிறப்பம்சங்களுடன் சந்தைக்குள் களமிறங்க இருக்கிறது இந்த பைக். 100 கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு 4.6 லிட்டர் பெட்ரோல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பைக்கின் ஆரம்ப கட்ட விலை சுமார் 13 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து இந்த பைக்கை வாங்குவதற்கு பேசாமல் ஒரு வீடு அல்லது கார் கூட வாங்கிவிடலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. விலைக்கு தகுந்த சிறப்பம்சங்கள் இந்த பைக்கில் இருக்கும் என்றாலும் சாமானியர்களோ அல்லது நடுத்தர வர்க்கத்தினரோ இதை வாங்குவது என்பது முடியாத காரியம் தான்.

scrambler-bike