#BarneyRule குடிபோதை தலைக்கேறி 800 கிலோமீட்டர் நடந்து சென்ற ஸ்காட்லாந்து வாலிபர்!
  • 18:58PM Oct 15,2019 Scotland
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:58PM Oct 15,2019 Scotland

பெரும்பலும் போதை ஏறிவிட்டால் பல ஆண் மகன்கள் தன்னை அறியாமல் செய்யக்கூடாத காரியம் அனைத்தையும் தைரியமாக செய்வார்கள், அதிலும் சில குடிமகன்கள் கிறுக்கு தனமான காரியத்தை செய்வார்கள். இந்த வரிசையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் குடிபோதையில் 800 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். 20 வயதாகும் Barney Rule ஸ்காட்லாந்தின்  University of Edinburgh-ல் வரலாறு மற்றும் அரசியல் பாடம் படித்துவந்தார். இந்நிலையில் தனது படிப்பின் மீது நாட்டம் இல்லாத Barney Rule கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தனது கல்லூரி படிப்புக்கு குட்பை கூறி வெளியேறினார்.

#Kidney Stone: கத்தியின்றி ரத்தமின்றி சிறுநீரக கற்களை அகற்ற ஒரே வழி இதுதான்!!!

கடைசி நாள் என்பதால், Barney Rule தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு பார்ட்டியில் கலந்துகொண்டார். அப்போது தனது அளவுக்கு மீறி அதிகமாக மது அருந்தியுள்ளார். அளவுக்கு மீறி மது அருந்தும் ஆண்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எதையாவது செய்வார்கள். அதேபோல Barney Rule தனது சுயநினைவை இழந்து குடிபோதை தலைக்கேறி கால் போனபோக்கில் நடக்க தொடங்கியுள்ளார். தொடர்ந்து நிக்காமல் நடந்து கொண்டிருந்த Barney Rule-க்கு இரண்டாம் நாள் இரவின் போது தான் போதை தெளிந்துள்ளது. அப்போது தான் அவருக்கு, தான் சுமார் 13 மைல் தொடர்ந்து நடந்துவந்தது தெரிந்துள்ளது. 

Barney Rule-க்கு தனது சிறுவயதினில் இருந்தே நீண்டதூரம் நடந்து செல்லவேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், அதன் நினைவில் சுமார் 20 கிலோமீட்டர் போதையில் நடந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இவர் அத்துடன் நின்றுவிடவில்லை. தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் தனது சேமிப்பு மற்றும் கல்லூரி உதவித்தொகையை வைத்துக்கொண்டு நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். தற்போது வரையில் நடந்தே 800 கிலோமீட்டர் கடந்துவிட்டார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியை அடைந்துள்ள Barney Rule ஸ்பெயின் நாட்டை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top