#PHOTOCHROMELEON: CHAMELEON தெரியும், அதென்ன CHROMELEON??? அதுவும் PHOTO CHROMELEON???
  • 17:18PM Sep 21,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:18PM Sep 21,2019 Chennai

COLOR-கள் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அதாவது இது பெரிய புரட்சியாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. சரி, இதற்கு எதற்காக நாம் தேவையில்லாமல் CHAMELEON எனப்படும் பச்சோந்தியை இழுத்தோம் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. பச்சோந்தி எப்படி தன்னுடைய தேவைக்கேற்ப வண்ணங்களை மாற்றிக் கொள்ள முடியுமோ, அதே போல இனி நாம் பயன்படுத்தும் வண்ணங்களையும் இப்படி மாற்றிக் கொள்ள முடியும். யோசித்துப் பாருங்கள், கடையில் வாங்கிய புடவையின் நிறம் பிடிக்கவில்லை என்றால், உடனே அதை நம்மால் மாற்றிக் கொள்ள முடிந்தால்??? அதைத்தான் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒரு COLOR-ஐப் பூசிவிட்டு, அதன் மீது ULTRA-VIOLET RAY-வைப் பாய்ச்சினால், அப்படியே நிறம் மாறுகிறது. மாறிய நிறம் அப்படியே இருக்கிறது. திரும்ப மாறுவதில்லை. மாறிய COLOR-ன் மீது மீண்டும் ULTRA-VIOLET RAY-வப் பாய்ச்சினால், மீண்டும் வேறு நிறம் மாறுகிறது. ஆம், பச்சோந்தியைப் போல நிறம் மாறும் இந்த DYE-யை, அமெரிக்காவிலுள்ள MAASCHUSETTS INSTITUTE OF TECHOLOGY – MIT விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர். “PHOTO CHROMELEON” என்று பெயரிடப்பட்ட இந்த வித்தியாசமான PHOTOCHROMIC DYE-யை, MOBILE CASE-கள் மீது, பலவித DESIGN-களை உருவாக்கிக் காட்டி அசத்தியிருக்கின்றனர், விஞ்ஞானிகள்.

ULTRA-VIOLET RAY-ன் குறிப்பிட்ட FREQUENCY-கள் பட்டால் மட்டும், நிறம் மாறும் COLORING AGENT-களை, PHOTOCHROMIC DYE-ல் கலந்து இதை அவர்கள் சாதித்துள்ளனர். PHOTO CHROMELEON TECHNOLOGY-யை இன்னும் துல்லியமாக்கினால், காலணிகள், கார்கள், வீடுகள் என்று எல்லா பரப்புகளிலும் இந்த DYE-யைப் பூசி, வேண்டிய நிறத்தை நாமே வரவழைக்கவும், அவை சலித்துப் போனால், ULTRA-VIOLET RAY-யைப் பாய்ச்சி வேறு COLOR-கள், DESIGN-களை புதுப்பித்துக் கொள்ள முடியும். FABRIC COLOR-களாகவும் இவற்றைப் பயன்படுத்த முடிந்தால், எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். துணியைக் கழட்டவே வேண்டியிருக்காது அல்லவா???

Baby Color Myths  |  Converse Shoes  |  Psychologized  |  Holi Festival of Colors  |  White is Beauty???  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top