#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம்!!! காலாண்டு விடுமுறை ரத்தா???
  • 16:41PM Sep 16,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:41PM Sep 16,2019 Chennai

OCTOBER 2. மகாத்மா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் காந்தியடிகளின் பிறந்த நாள். அதிலும் சிறப்பு அவரது 150-வது பிறந்த நாள் என்பது கூடுதல் விசேஷம். இதற்காகப் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் போட்டிகளும், பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏன் INDIA POST அவரைப் பற்றிக் கடிதம் எழுதும் போட்டி அறிவித்திருந்ததையும் நாம் பார்த்தோம். இதையடுத்து, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளிலும், அவரது வாழ்க்கை மற்றும் அவருடைய வாழ்வியல் சிந்தனைகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகச் சிறப்புச் செயல்திட்டம் ஒன்றை அறிவுறுத்தியிருக்கிறது.

இந்தச் செயல்திட்டம், 23/09/2019 முதல் 02/10/2019 வரை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. வளரும் தலைமுறை காந்தியைப் பற்றியும், அஹிம்சையைப் பற்றியும் படிப்பது நல்லதுதான் என்றாலும், இந்த தேதிகள் சரியாகக் காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் வருவதுதான் பிரச்சினையைக் கிளப்பிவிட்டது என்று கூடச் சொல்லலாம். இரண்டு நாட்களாகக் காலாண்டு தேர்வு விடுமுறை ரத்தா என்ற கேள்விகள் அனைவரையும் துளைத்தெடுத்துக் கொண்டிருந்ததைச் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துப் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, காந்திய சிந்தனை அவரவர் விருப்பம் சார்ந்தது. அதனால் பங்கேற்றுத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். வரச் சொல்கிறார்களா, வர வேண்டாம் என்று சொல்கிறார்களா என்று இன்னமும் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. இதற்குப் பதில் மாணவர்களுக்கான பொழுதுபோக்குடன், காந்திய வாழ்க்கை முறையையும், சிந்தனைகளையும் சொல்லிக் கொடுத்தால் இன்னமும் நல்லது என்று மக்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். தலைவர்களின் வாழ்க்கையைக் குழந்தைகள் அறிந்து கொண்டால், அவர்களுக்கும் நல்லதுதானே???

Nursing Diploma Courses  |  Real Life Lessons  |  Movie Making Course  |  Engineering Courses  |  ACS Company Secretary  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top