#Factcheck : சிவந்த முதுகு, கொடூரமாக தாக்கப்பட்ட 6 வயது சிறுமி - பேஸ்புக்கில் வைரலாக பரவும் பதிவின் பின்னணி!
  • 10:08AM Sep 23,2019 Kanyakumari
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:08AM Sep 23,2019 Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில், பேஸ்புக், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில், 5 வயது மதிக்கத்தக்க பள்ளி சிறுமியின் முதுகில் கம்பால் அடிக்கப்பட்டதில் ஏற்பட்ட ரத்த கட்டும்,  கை விரல் கிழிந்த நிலையில் காணப்படும் படங்களும் வெளியாயின. சமூக வலை தளங்களில் வைரலாகும் படத்தில் காணப்படும் அந்த மாணவி பெத்தேல்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருவதும் தெரியவந்தது.

வெள்ளியன்று, பள்ளி சென்ற சிறுமி  கடுமையான உடல் வலியால் தேர்வெழுத முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது. அச்சிறுமியிடம் பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த போது, சிறுமியின் தாயாரின் தோழி டியூஷன் சென்டர் நடத்தி வருவதாகவும், அந்த  டியூஷன் சென்டரில் படிக்க சென்றபோது கடுமையான முறையில்  தாக்கப்பட்டது குறித்த தகவல்களை தெரிவித்தார்.  

இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறுமி படித்த பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது.  இதற்காக, வியாழனன்று  பள்ளியில் தேர்வு எழுதிய போது அறையிலேயே மயங்கி  விழுந்ததாகவும், டியூசன் ஆசிரியை அதிக மதிப்பெண் எடுக்க துன்புறுத்தி, தன்னை ஸ்டீல் அகப்பை, கம்பால் தாக்கியதாக, சிறுமி தாக்கியுள்ளார். தங்களிடம் தெரிவித்ததாக ஆசிரியர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.

காலாண்டு தேர்வில் ஒரு மதிப்பெண் கூட குறையாமல் முழு மதிப்பெண் எடுக்க வைக்க வேண்டும் என்றும், அதற்காக சிறுமியை என்ன செய்தாலும் பரவாயில்லை என சிறுமியின் தாயார் கூறியதாகவும் அதன் காரணமாகவே சிறுமியை இப்படி காட்டுமிராண்டி தனமாக , கொடூரமான முறையில் தாக்கியதாகவும் அசாதரணமான முறையில் பதில் கூறியுள்ளார் டியூசன் ஆசிரியை ஜெசிமோள். மதிப்பெண்ணை வைத்து ஒரு குழந்தையை எடை போடா நினைப்பது எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சாட்சி. | #Factcheck: பீதியை கிளப்பும் பிரிவினைவாதிகள் - காஷ்மீர் மக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனரா? உண்மை இதுதான்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top