Lushgreen

யோவ் இப்படியெல்லாம் சட்டம் போட்டா புள்ளிங்க எப்படி படிக்க முடியும்? பிஞ்சுகளை இப்படியெல்லாம் கொ டுமை பண்ணாதீங்க!

Sep 09 2021 06:44:00 AM

பள்ளி என்றால் கடுமையான விதிமுறைகள் இருக்கும். நாம் படித்த காலத்தில் இந்த வாசகம் பொருந்தும். இந்த தலைமுறை பள்ளி குழந்தைகளிடம் கண்டிப்பு என்ற வார்த்தையை பிரயோகிப்பது பெற்றோர்களுக்கே கடினமான விஷயம் என்ற சூழலில் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.

schools-in-japan weird-rules

நம்ம ஊருல தான் இப்போ பள்ளி, கல்லூரிகளில் கடுமையான விதிமுறைகள் கிடையாது. ஆனால் உலகின் ஒரு சில நாடுகளில் சில வித்தியாசமான விதிமுறைகள் உள்ளன. பல துறைகளிலும் உலகை திரும்பிப்பார்க்க வைக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள ஜப்பானில் பள்ளி குழந்தைகளுக்கு சில விதிமுறைகள் உள்ளன. அவை சற்று வித்தியாசமாக நமக்கு தெரிகிறது.

schools-in-japan weird-rules

ஜப்பான் பள்ளிகளில் மாணவிகளின் உள்ளாடைகள் வெண்மையாக இருக்க வேண்டும். இதை கண்காணிப்பதற்கு பெண் ஆசிரியர்களின் குழு ஒன்று உள்ளது. ஆய்வில் அவர்களின் பிளவுசுகள் மற்றும் பாவாடைகள் ஆகியவற்றின் நிறம் பரிசோதிக்கப்படுகிறது.

schools-in-japan weird-rules

உங்களுக்கு பலவீனமான தொண்டை இருந்தாலும் கழுத்தில் ஒரு மஃப்ளரை போர்த்துவது இங்கிருக்கும் பள்ளிகளில் அனுமதிக்கப்படாது. அதேசமயம் ஒரு டவலைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது.

schools-in-japan weird-rules

சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு ஜப்பானிய பள்ளிகள் ஹெல்மெட் வழங்குவது நடைமுறையில் உள்ளது. இந்த ஹெல்மெட் விபத்தில் உடைந்தாலும் மாற்ற முடியாது. உங்கள் தலைக்கவசத்தை கவனித்துக்கொள்வதை பள்ளி வலியுறுத்துகிறது.

schools-in-japan weird-rules

ஏனெனில் அது உங்களிடம் மட்டுமே உள்ளது. அவர்கள் ஒரு மாணவரின் வாழ்க்கையை எவ்வளவு மதிப்பிடுகிறார்கள் என்று இதை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஒரு மாணவரின் ஹெல்மெட் எதிர்பாராத விதமாக உடைந்தாலும் பட்டப்படிப்பு வரை உடைந்த ஹெல்மெட்டைப் பயன்படுத்தச் சொல்கின்றனர். தங்களுடைய பொருளை அவர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

schools-in-japan weird-rules

மாதவிடாய் காலத்தில் நீச்சல் பாடம் நடத்தும்போது மாணவிகள் சிரமத்தை சந்திக்க நேரிடலாம். உங்கள் மாதவிடாயின் போது நீங்கள் அசௌகரியத்தை உணர்வது மட்டுமல்லாமல், தண்ணீருக்குள் செல்வதன் மூலம் உங்கள் உடலை குளிர்விப்பதும் சிறந்தது அல்ல.

schools-in-japan weird-rules

ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நீங்கள் நீச்சல் வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் கோடை விடுமுறையில் துணை வகுப்புகளில் கலந்து கொண்டு 500 மீட்டர் நீந்த வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்படலாம்.

schools-in-japan weird-rules

மாணவிகள் அனைவரும் நீச்சல் வகுப்பை புறக்கணிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக அவர்களின் மாதவிடாய் தேதிகளை பள்ளிகள் தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் அட்டவணை அமைத்து நீச்சல் வகுப்பை நடத்துகின்றன. அந்தரங்க விஷயம் என்று சொல்லி நீங்க பள்ளிக்கூடத்துல எதையும் மறைக்க முடியாது.

schools-in-japan weird-rules

இதை எல்லை மீறிய செயல் என்று எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் நீச்சலில் மாணவிகளை ஈடுபடுத்த மேற்கொள்ளும் உத்தியாக பாருங்க. இல்லைன்னா ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பதக்கம் வெல்வது சாத்தியமில்லையே. சிறு வயதில் இருந்தே பள்ளிகள் அனைத்து விஷயங்களிலும் கவனம் மற்றும் கண்டிப்புடன் இருப்பது நல்லது தானே. ஜப்பான் பள்ளி விதிமுறைகளை பத்தி உங்களுக்கு என்ன தோணுது?