Misc

எது வேணாலும் மாரி இருக்கலாம்! ஆனால், இதை மாற்ற யாராலும் முடியாது! அப்படி என்ன அது?

Apr 04 2021 10:05:00 PM

அன்றிலிருந்து இன்றுவரை பெரும்பாலும் நாம் அனைவருமே சிலேட், நோட், பேப்பர், பென்சில், பேனா இதை வைத்துக்கொண்டு தான் குழந்தைகளாக இருக்கும் காலத்தில் படித்தோம். ஆனால் இப்போது அதுவும் கொரோனா காலத்தில் பாருங்கள் என்னென்ன வந்து விட்டது. கணினி, மடிக்கணினி, டேப்லெட் என்று சொல்லப்படும் பலகை கணினி, ஸ்மார்ட்போன் இவற்றை கொண்டு ஆன்லைன் வாயிலாக கல்வி, தேர்வு அனைத்தும் அரங்கேறுகிறது.

best-school-culture

நாம் கற்ற கல்விக்கும் இன்றைய மாடர்ன் கல்விக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. பள்ளியில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதி சொல்லித்தருவதை பார்த்து நம்முடைய நோட்டில் பக்கம் பக்கமாக எழுதி படிப்போம். நமது மூளையில் அது அப்படியே பதிந்து விடும். இப்போது இருக்கும் ஆன்லைன் கல்வியில் திரையில் ஆசிரியர் சொல்வதை கேட்டு அப்படியே படித்து தேர்வும் ஆன்லைனில் எழுதுவது எந்த அளவுக்கு குழந்தைகள் மனதில் பதியும்.

best-school-culture

இது பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ள கலிபோர்னியா விஞ்ஞானிகள் டச் ஸ்க்ரீன் என்று சொல்லப்படும் தொடு திரையில் படிப்பது எழுதுவதை விட நோட்டுப்புத்தகத்தில் பேனா அல்லது பென்சில் கொண்டு எழுதுவதே மூளையில் ஆழமாக பதியும் என்று கூறியுள்ளனர். இப்போது கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வாயிலாக கல்வி பயின்றாலும் குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகத்தில் எழுதி படிக்கச் செய்வதே சிறந்தது என்று கல்வியாளர்கள் பரிந்துரை செய்கின்றனர்.